top of page

Pancakacham and madisar

பஞ்சகச்சம்.&மடிசார்..

பிராமணர்களில், இந்த வழக்கம், மிக மிகக் குறைந்து வருகிறது

ஸ்மார்த்த, வைஷ்ணவ, மாத்வ குடும்பங்களில், இந்தப் பழக்கம் அடியோடு மறைந்து விடுமோ என்கிற அச்சமும் நிலவுகிறது.

இது,இந்தத் தென் தேசத்தில்தான் இந்த நிலைமை.

நல்ல வழக்கங்களை ,நாம் விட்டுவிட்டு,

நல்லவையே நமக்கு நடக்க வேண்டும் என்று வேண்டினால் இதைவிடத் தன்னலம் வேறு இல்லை

பஞ்சகச்சம் பற்றிய ஒரு ச்லோகம்

குக்ஷித்வயே ததா ப்ருஷ்டே நாபௌ த்வௌ பரிகீர்த்திதௌ

பஞ்சகச்சா:ஸ்து தே ப்ரோக்தா: சர்வ கர்மஸு ஷோபனா: -….

குக்ஷி என்றால் இடுப்பு,

குக்ஷித்வயே = இரண்டிடுப்பில் ( வலது இடுப்பில் ஒன்று இடது இடுப்பில் ஒன்று )

ததா = அவ்வாறு

ப்ருஷ்டே =பின்புறத்தில் ஒன்று

நாபௌ = தொப்புளில் இரண்டு

கச்சம் என்றால் சொருகுதல்

பஞ்சகச்சா: = ஐந்து சொருகலானது

சர்வ கர்மஸு = எல்லா காரியங்களிலும்

ஷோபனா: = மன்களகரமானதாக

ப்ரோக்தா: = கூறப்படுகிறது

அதாவது வலது இடுப்பில் ஒரு சொருகல்,

இடது இடுப்பில் ஒன்று,

பின்புறத்தில் ஒன்று,

தொப்புள் பகுதியில் இரண்டு

என்று ஐந்து சொருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது.

.பெண்களுக்கும் —திருமணமான பெண்களுக்கும் இப்படி ”மடிசார்”புடவை உடுத்தும்போது, விஞ்ஞான ரீதியாகப் பலன்கள் சொல்லப்படுகின்றன.

முக்கியமாக, வைதீக காரியங்களிலும் , கோவிலுக்குச் செல்லும்போதும்,ஆசார்யனை ேவிக்கப்போகும்போதும் விவாஹமான புருஷர்களும் ,ஸ்த்ரீகளும் பஞ்சகச்சமும் .&மடிசாரும் உடுத்திக்கொள்ள வேண்டும்.

.. இல்லாவிட்டால் செய்யும் நல்ல கார்யங்கள் / கர்மாக்கள் நஷ்டமாகும்.

திருமணமானதும் பிராமணப் பெண்கள் தினமும் இந்தப் பாணியில்தான் புடவை அணியவேண்டும்.

..சமையலும் குளித்துவிட்டு மடியாக, சுத்தமாக இந்தப்பாணி புடவை உடுத்திக் கொண்டுதான் செய்யவேண்டும்.

..மடியை சார்ந்தது என்பதால் மடிசார் என்பர்..

திருமணமான பெண்கள்— பொதுவாக—-வைணவர்கள் புடவையின் மேல் தலைப்பை இடது பக்கமாகவும்,

ஸ்மார்த்தர்கள் வலது பக்கமாகவும் மடித்து அணிவர்…( இவற்றிலும் விதி விலக்குகள் உண்டு–உதாரணம் ஸ்ரீவில்லிபுத்தூர் ,சிதம்பரம் )

மடிசார் உடுத்துவதற்குப் புடவையின் நீளம் அதிகமாகத் தேவைப்படுமென்பதால் ஒன்பது கெஜம் நீளமுள்ளப் புடவையே பயன்படுகிறது…

தற்காலத்தில் தினமும் மடிசார் உடுத்துவதில்லை. இப்போதெல்லாம் ,சற்று எளிதான முறையில் ஆறு கெஜம் நீளப் புடவையிலும் மடிசார்உடுத்தும் நெளிவு சுளுவுகள் வந்துவிட்டன.

மடிசார்ப் புடவை எந்தச் சந்தர்ப்பத்திலும் பெண்களின் உடலிலிருந்து நழுவாது,வழுவாது, அவிழாது, பறக்காது

பட்டு, பருத்தி முதலான எல்லாவிதமான துணிகளிலும் மடிசார் புடவைகள் உள்ளன..

Reposting it from Amirthavahini google group.

35 views0 comments
bottom of page