top of page

ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்சவம் 15-12-2017 கும்பகோணம்.

கும்பகோணம் காமாக்ஷி மண்டலியினரின் 38ம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்சவம் 15-12-2017 அன்று, காஞ்சி சங்கர மடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 38 வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்சவத்தில், இந்த வருடம் சுமார் 65 வருடங்களாக நாம சங்கீர்த்தனம் செய்து வரும், டைகர் ஸ்ரீ சுப்ரமண்ய பாகவதர் அவர்களைப் பாராட்டி கவுரவித்தார்கள். இம்மண்டலியினர் ஆண்டு தோறும் நாம சங்கீர்த்தனத்தைப் பரப்பி வரும் பாகவதர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பாராட்டி கவுரவிப்பது குறிப்பிடத்தக்கது. காமாக்ஷி மண்டலியில் உள்ள அனைத்து மகளிரும் ஆர்வத்துடனும், பக்தியுடனும் பங்கேற்று சிறப்பாக இந்த வைபவத்தை நடத்தினார்கள். இவ்வைபவத்தின் சில காட்சிகளைக் காணொளியில் காண்போம்.

Courtesy: Smt.Malathi Jayaraman,Kumbakonam.

bottom of page