மிழலை நத்தம் கைலாசநாதர் ஆலயம்
கும்பகோணம் சோழபுரம் சாலையில் 10கி.மீ தூரத்தில், கோவிலாச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த மிழலை நத்தம் என்ற ஊரே பெருமிழலைக்குறும்ப நாயனாரின் அவதாரத்தலமாகும். இதற்கு ஆதார பூர்வமாக பல தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வூரில் உள்ள காமாட்சியம்மை உடனுறை கைலாசநாதர் கோவிலில் உள்ள அதிசயக் கிணற்றில் தண்ணீர் வற்றுவதே இல்லை. வரலாற்றில் மிழலைக் கூற்றம் என்று வழங்கப்பட்ட ஊரே இன்றைய மிழலை நத்தம் ஆகும். நவக்கிரகங்களில் இராகுவும் கேதுவும் சேர்ந்து காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பெருமிழலைக்குறும்ப நாயனாரின் அவதாரத்தலமாதலால் இங்கு அவருக்கு உருவச்சிலை உள்ளது. ஆண்டுதோறும், ஆடி சித்திரை அன்று அவருடைய குருபூஜையை இவ்வூர் மக்கள் மிக்க பக்தி, சிரத்தையுடன் நடத்துகிறார்கள்.
பெருமிழலைக்குறும்ப நாயனாரின் அவதாரத்தலமான இக்கோவிலின் சிறப்பையும் நாயனாரின் பெருமைகளையும் இக்காணொளியில் விளக்குகிறார் திரு சேகர் வெங்கட்ராமன் அவர்கள்.
இந்த ஆண்டு இவருடைய குரு பூஜை 06-08-2019 அன்று அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பாக நடந்தது. அதன் சில காணொளிக் காட்சிகள்...
அர்ச்சகர் திரு நடராஜன் அவர்களின் தொடர்பு கை பேசி எண்- 9865511199