மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள மருதூர் சிவாலயம் அழகான சோலைக்குள் அமைந்துள்ளது. ஆலயத்தில் நுழையும் முன்பே இயற்கை எழிலும் பறவைகளின் கீச்சொலியும் நம்மை வரவேற்கின்றன. ஆலயத்தைச் சுற்றியோ அழகான நந்தவனம், அதில் வண்ண மலர்கள் நம் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. கோவிலும், அதைச் சுற்றியுள்ள நந்தவனமும் தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன. பூஜை செய்யும் திரு ஸ்வாமிநாதன் அவர்கள் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இந்த வயதிலும் கோவிலைப் பராமரிப்பதில் அவர் காட்டும் ஆர்வம் போற்றத்தக்கது. கிராம சிவாலயங்களில் இறைவனும், இறைவியும் தங்களை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இக்கோவிலுக்கு, தனக்குப்பிறகு பூஜை செய்ய ஒரு அர்ச்சகரைத் தேடும் முயற்சியில் நம் உதவியை நாடும் அர்ச்சகரின் கை பேசி எண்- திரு ஸ்வாமிநாதன்-8754379502.
திரு சேகர் வெங்கட்ராமன் அவர்கள் இக்காணொளியில் மருதூர் சிவாலயத்தின் சிறப்புக்களை விளக்குகிறார்.