Karuvalarcheri
- Thanjavur Paramapara
- Sep 25, 2019
- 1 min read
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில், கருவளர்சேரி
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில், கருவளர்சேரி, கும்பகோணத்திலிருந்து ஏழு கி.மீ தொலைவில் கும்பகோணம்- வலங்கைமான் சாலையில் உள்ளது. மருதாநல்லூரிலிருந்து இடதுபுறம் செல்லும் , இருபுறமும் இயற்கை எழில் கொஞ்சும் சாலையில் சுமார் 1.6கி.மீ தொலைவில் உள்ளது.
இக்கோவிலில் நான்காவது தலைமுறையாக பூஜை செய்த சுப்பையா சிவாச்சாரியார் இவ்வூர் அக்ரஹாரத்தில் இருந்த நாற்பது வீடுகளில் பிடியரிசி வாங்கி இக்கோவில் மதில் சுவரைக் கட்டியதாக தற்சமயம் பூஜை செய்யும் ஏழாவது தலைமுறயைச் சேர்ந்த ஸ்ரீ விக்னேஷ் சிவாச்சாரியார் கூறினார்.

பூஜை செய்யும் அர்ச்சகர் இல்லம் கோவிலுக்கு மிக அண்மையிலேயே உள்ளது. ஸ்ரீ விக்னேஷ் சிவாச்சாரியார் இக்கோவிலின் சிறப்புக்களை இக்காணொளியில் விளக்குகிறார்.
Thanks to Smt Mahima Sathish Narayanan, USA.
Courtesy:Smt. Malathi Jayaraman, Kumbakonam.