சந்தியா காலத்துச் செங்கதிர் போலவாம்ஆடை தொந்தியார் சோதரன் ஆயுதம் போலவாம்தண்டம் நந்தியார் நாதனின் தோற்றமாய் மேனிவெண்ணீறு வந்தனம் குருவந்தனம் ஜகத்குருஸ்ரீ சந்திரசேகரம்.
முந்தைய பாரதம் அளந்தது காலடியவ்வழி வந்ததவ சீலராம்சீடரோ காஞ்சியின் பேரொளி சிந்தையில் இருவரும் சிவபிரா னிருவுரு வந்தனம் குருவந்தனம் ஜகத்குருஸ்ரீ சந்திரசேகரம்.
எந்தைவே றல்லதாய் உமைவேறு வேறல்லமாயா சிந்தையின் ஜாலம்நீங்க ஜீவனும் பரமனுமொன்றே விந்தையத் வைதநெறிவழி தானொழுகித் தரணிக்குரைத்தார் வந்தனம் குருவந்தனம் ஜகத்குருஸ்ரீ சந்திரசேகரம்.
எந்தையிறை யுவந்தளித்த வேதங்கள் நான்கவற்றுள் பிந்திநின்று வழக்கொழிந்து மறையாது அதர்வணத்தை முந்திநின்று மீட்டெடுத்த மகாபெரிய வாசரணம் வந்தனம் குருவந்தனம் ஜகத்குருஸ்ரீ சந்திரசேகரம்
சொந்தமாய்த்தவ வாழ்வினில்பல துரியநிலைகளைக் கடந்தவர்மனம நொந்துசரணடை மாந்தர்குறைகேட்டு வந்தவர்க்குப காரமுதவிகள் தந்தருள்புரி தாயுமானவர் வந்தனம் குருவந்தனம் ஜகத்குருஸ்ரீ சந்திரசேகரம்
Written by: Sri. S Suresh 49 S S Nagar Natham Road Dindigul 624003
Mob: 9442024389