26/12/2024
அனுக்ரஹ பாஷணம்
இன்று மேப், கூகிள் எல்லாம் இருக்கு. ஆனால் அந்தக் காலத்தில் வியாசர் பாரத தேசத்தின் வரைபடத்தை காட்டியவர் வியாசர்.
சரித்திரத்தை சொல்லிக் கொடுத்தவர் வியாசர். சுகம், துக்கம் இரண்டையும் பார்க்கக் கூடிய இடம் பூலோகம். யார் யார் நல்ல காரியம் செய்திருக்கா, சர்வ ஜந்துக்களும் எவ்வளவு நல்ல காரியம் கோடுத்திருக்கா. தானத்தின் மகிமையைக் கூறுவது புராணம். அதன் மூலம் எத்தனை ஸ்லோகங்கள். நமது தர்மம் மனிதனை தெய்வமாகவும், தெய்வத்தை மனிதனாகவும் பார்க்கும் தர்மம் நமது தர்மம். வியாசர் மூலமாக நாம் சனாதன தர்மத்தை பார்க்கிறோம்.
சாஸ்திரத்தின் சாரம் மகாபாரதம்.
கேரளாவில் இருந்து தான் தர்மம் ஆரம்பித்து இருக்கு. ஆதி சங்கரர் நேபாள் போயிருக்கிறார். ஜெகந்நாதன் கோவில் சென்று உள்ளார்.
தனக்கு ஞானம் தான் தேவை என்று ஜெகன்னாத ஸ்தோத்திரம் மூலம் வர்ணிக்கிறார். காசிக்கு போனார். கங்கையை வர்ணிக்கிறார். காலையும், மாலையும் ரிஷிகள் வந்து பூஜை செய்கிறார்கள்.காசி என்பது உத்தமமானது என்கிறார் ஆச்சாரியார். சங்கரர் எல்லா ஊருக்கும் சென்றார். மஹாராஷ்டிரா வந்தார். இடுப்பில் கைவைத்து இருக்கும் பாண்டு ரங்கனை பாடுகிறார். மீனாட்சியை பிரார்த்திக்கிறார். ஶ்ரீ சைலம் வருகிறார். Culture மூலம் இந்தியாவை இணைத்தார். அந்த சிந்தனை வளர்ந்த இடம் கேரளா.
மஹா பெரியவா கேரளா வந்திருக்கார். கேரளத்த்திற்கும் மடத்திற்கும் சம்பந்தம் உண்டு. கேரளாவில் யாகத்தை இன்றும் நடத்துகிறார்கள். யந்திரம் ஆதிசங்கரர் பிரபலப் படுத்தினார். ஒற்றுமை, ஏகத்துக்கும் ஆதி சங்கரர் பல செய்தார்.கேரள தேசத்தில் நாம் தர்மப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இன்று நிறைய செய்ய வேண்டிய உள்ளது. கேரளத்தில் இருந்து நிறைய இடத்தில் நிறைய பண்ணிண்டு இருக்கா. கிராமத்தில் நிறைய செய்ய வேண்டும். இல்லம், கொல்லம் இரண்டையும் கவனிக்க வேண்டும்.
சமஸ்கிருதம் படித்தால் சாஸ்திரம், ஆயுர்வேதம். தந்திரம் படிக்கலாம். தர்மத்திற்கு நிறைய பேர் சேவை செய்து கொண்டு இருக்கணும். நமது நாராயணீயம், கீதை, சாஸ்திரம் அனைத்தும் படிக்கணும். சனாதன தர்மத்தை கேரளாவில் வளர்த்து, நாடும் வளரனும். கேரளாவின்
தார்மீக சைதன்யம் தேசத்திற்கு நலத்தை தரும். நாம் அனைவரும் ஆஸ்திகா. கேரளாவில் சமூகம் நிறைய செய்யறா நிதியும்,நேரமும் அனைவரும் தர வேண்டும். நல்ல படித்தவா கேரளம் மூலமாக சக்தி சேர்க்க வேண்டும். அம்பாளின், ஆதி சங்கரரின் அருள் கிடைக்கட்டும்
Comments