இந்திய ராணுவத்தின் படைப் பிரிவுகளும் அதன் கோஷங்களும்:
இந்திய ராணுவத்துக்கு வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் போன்ற கோஷங்கள் பொதுவாக உண்டு. அதே சமயம் ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் தனி பொன்மொழியும், போர் முழக்கங்களும் உண்டு.
1. மெட்ராஸ் ரெஜிமெண்ட் :-
பொன்மொழி - ஸ்வதர்மே நிதானம் ஷ்ரேயா (ஒருவரின் கடமையை செய்து இறப்பது மகிமை மிக்கது
.
போர் முழக்கம் : "வெற்றிவேல் வீரவேல்"
2.ப்ரிகேட் ஆஃப் கார்ட்ஸ், காவலர்களின் படை
பொன்மொழி : பெஹ்லா ஹமேஷா பெஹ்லா (முதல் எப்போதுமே முதல்)
போர் முழக்கம் : கருட் கா ஹன் போல் ப்யாரே ..(நான் கருடனின் மகன் என்று சொல்லுங்கள் நண்பரே)
3. ராஜ்புதானா ரைபிள்ஸ் :-
பொன்மொழி - வீர் போக்யா வசுந்தரா ( வீரமுள்ளவர்களுக்கே பூமி சொத்தாகும்)
போர் முழக்கம் : ராஜா ராமசந்த்ர கி ஜெய் (ராஜா ராமசந்திரருக்கே வெற்றி)
4. ராஜ்புத் ரெஜிமெண்ட்
பொன்மொழி : சர்வத்ர விஜய்
போர் முழக்கம் : போல் பஜ்ரங் பலி கி ஜெய் (அனுமனுக்கு வெற்றி என்று சொல்லுங்கள்)
5. டோக்ரா படைப் பிரிவு :-
பொன்மொழி - கர்தவ்யம் அன்வாத்மா (இறப்பதற்கு முன் கடமையைச் செய்வோம்)
போர் முழக்கம் : ஜ்வாலா மாதாகி ஜெய்
6. சீக்கிய ரெஜிமென்ட்
பொன்மொழி - நிச்சய கர், அப்னி ஜீத் கரோன். ( உறுதி செய் உன்னுடைய வெற்றியை)
போர் முழக்கம் : ஜோ போலே சோ நிஹால், சத் ஸ்ரீ அகல் (உண்மையே கடவுள் என்று சொல்பவர்(அழுபவர்) ,எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார். Shout Aloud in Ecstasy, True is the Great Eternal God!)
7. சீக்கிய லைட் காலாட்படை
பொன்மொழி : டெக் டெக் ஃபதே (அமைதியில் செழிப்பு, போரில் வெற்றி)
போர் முழக்கம் : ஜோ போலே சோ நிஹால், சத் ஸ்ரீ அகல் (உண்மையே கடவுள் என்று சொல்பவர்(அழுபவர்) ,எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார். Shout Aloud in Ecstasy, True is the Great Eternal God!)
8. பாராசூட் ரெஜிமெண்ட்
பொன்மொழி : சத்ருஜீத்
போர் முழக்கம் : பலிதான் பரம் தர்மம் (தியாகமே ஆகப் பெரும் தர்மம்)
9. பஞ்சாப் ரெஜிமென்ட்
பொன்மொழி : ஸ்தல் வ ஜல் ( நிலம் மற்றும் நீர் வழியாக)
போர் முழக்கம் :
போர் முழக்கம் : ஜோ போலே சோ நிஹால், சத் ஸ்ரீ அகல் (உண்மையே கடவுள் என்று சொல்பவர்(அழுபவர்) ,எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார். Shout Aloud in Ecstasy, True is the Great Eternal God!)
ஜ்வாலா மாதாகி ஜெய்.
10. கர்வால் ரைபிள்ஸ்
பொன்மொழி : யுதயா கிருத் நிச்சய் (உறுதியுடன் போராடி வெற்றியை உறுதி செய்)
போர் முழக்கம் : பத்ரி விஷால் லால் கி ஜெய் ( பத்ரிநாதரின் பிள்ளைகளுக்கே வெற்றி)
11. குமாவோன் படைப்பிரிவு
பொன்மொழி : பராக்ரமோ விஜயதே ( மாவீரம்தான் வெற்றி பெறும்)
போர் முழக்கம் : காளிகா மாதா கி ஜெய்
12. அசாம் ரெஜிமெண்ட்
பொன்மொழி : அசாம் விக்ரம்
போர் முழக்கம் : ரினோ சார்ஜ்
13. பீகார் ரெஜிமெண்ட்
பொன்மொழி : கரம் ஹி தர்ம் (வேலையே தர்மம்)
போர் முழக்கம் : ஜெய் பஜ்ரங்பலி
14. ப்ரம்மோஸ் ஏவுகணை ரெஜிமெண்ட்
பொன்மொழி : சர்வத்ர இஸத் ஓ இக்பால் (எங்கும் எப்போதும் புகழுக்கும் கவுரவத்துக்கும்)
போர் முழக்கம் : சாமியே சரணம் அய்யப்பா
15. நாகா ரெஜிமண்ட்
பொன்மொழி : பராக்ரமோ விஜயதே
போர் முழக்கம் : ஜெய் துர்கா நாகா
16. கூர்க்கா படைப்பிரிவு
போர் முழக்கம் : ஜெய் மஹாகாளி அயோ கூர்க்காலி (மஹாகாளிக்கே வெற்றி கூர்க்காக்கள் இருக்கிறோம்
Comments