top of page

அயோத்யா நகரின் மிக ப்ராசீனமான கிராம தேவதை கோவில் சம்ப்ரோக்ஷணம்


த்ரேதா யுகத்திலிருந்தே அயோத்யா நகரில் “ தேவ காளி” கோவில் கிராம தேவதை கோவிலாக பூஜிக்கப் பட்டு வருகின்றது. இந்த அம்பாள் உத்திரவின் பேரில்தான் சக்ரவர்த்தி தஶரத மஹாராஜா, காஞ்சிபுரம் சென்று காமாக்‌ஷி அம்பாளை வழிபாடு செய்து முடித்துக் கொண்டு அயோத்யா நகர் திரும்பி, மஹாமுனி ருஷ்ய ஶ்ருங்கரை முன்னிட்டுக் கொண்டு புத்ரகாமேஷ்டி யாகம் செய்திட்டார். இக்கோவில், தற்போது நகர வளர்ச்சியின் காரணமாக ஊர் மத்தியில் இருப்பதால் பொது ஜனங்கள் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. மஹத்துக்கள், அவ்வப்பொழுது இக்கோவிலில் மராமத்து பணிகளை மேற்கொண்டு தேவகாளியை ஆராதித்துள்ளனர். தற்போது மிகப் பெரிய அளவில் ஶ்ரீராம் மந்திர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ப்ராசீனமான இக் கிராம தேவதையை ஆராதித்து இக் கோவிலுக்கு ஜீர்ணோத்தாரணம் செய்ய திரு உள்ளம் கொண்டு ஆக்ஞாபித்தார்கள். எனவே இப் பணிக்கு நேற்று, (16.10.2023) காலை மணி 9.00 -9.30 க்கு விதிவத்தாக, யஜுர் வேத பாராயணத்துடன் பந்தக்கால் முகூர்த்தம், ஜகத்குரு பூஜ்யஶ்ரீ பெரியவா தலைமையில் செய்விக்கப் பட்டது. ஜீர்ணோத்தாரண சம்ப்ரோக்ஷணம், நவராத்ரி சமயத்தில் 20-10–2023 அன்று காலை உகந்த முகூர்த்தத்தில் நடைபெற உள்ளது.








Comments


bottom of page