பூஜ்யஶ்ரீ பெரியவா 6-1-2025 அன்று ஶ்ரீமடத்தில், வேத பண்டிதர்கள் சாஸ்த்ரஞர்கள் கைங்கர்யபரர்கள் ஜோதிஷ சாஸ்திர நிபுணர்கள் முதலியோர்களுக்கு நரசிம்ம ட்ரஸ்ட் சார்பாக சன்மானங்களை வழங்கி கெளவரவித்தார்கள்
மேற்படி விழாவில் ஶ்ரீ ஸ்வாமிகள் வழங்கிய அனுக்ரபாஷணத்தில் வலியுறுத்தியதாவது:
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஶ்ரீமடம் சம்ஸ்தானம் காஞ்சிபுரத்தில், ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம அனுக்ரஹா ட்ரஸ்ட், அம்பத்தூர், நான்கு வேதங்களை நன்கு கற்றுத் தெளிந்த பண்டிதர்கள், சாஸ்திர வல்லுனர்கள், ஜோதிஷ வல்லுனர்கள், சமூக சிந்தனையுடன் தர்ம சாஸ்திர ப்ரசார பண்டிதர்கள் என சனாதன தர்ம பல்பிரிவு அறிஞர்களை ஆண்டு தோறும் தேர்ந்தெடுத்து அவர்களை அழைத்து, சால்வை, சன்மானங்கள் அளித்து கெளரவித்து வருகிறது. இந்த ஆண்டும் 15 வேத சாஸ்திர தர்ம வல்லுனர்கள் ப்ரசாரகர்கள் என்று பன்முக அறிஞர்களுக்கு ப்ருதுகள் எனும் கெளரவ பட்டத்தை பட்டங்களை ஶ்ரீ காஞ்சி சஙலகராச்சார்யார் பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஆசியுரை தந்து சன்மானங்கள் வழகினார்கள். தமது உரையில், ஶ்ரீ ஸ்வாமிகள், ப்ருதுகள் பெற்ற அனைவரையும் புகழ்ந்து பாராட்டினார்கள். மேலும , கல்விமான்களையும், கல்வி கேள்விகளில் சிறந்தவர்களையும் ஊக்குவிக்கவும், புதிய தலைமுறையினர் இது போன்ற கெளவரவ பட்டங்களை பெற முயற்சிக்கவும் ஊக்கம் தரும் வகையில் சன்மானங்களை வழங்கிவரும் மேற்சொன்ன ட்ரஸ்டிகளை பாராட்டினார்கள்.
Comments