top of page

Inauguration of the Exhibition 'Jayendram' Anugraha Bhashanam of Sri Periyava.

The text version of the Anugraha Bashanam delivered by PujyaSri Periyava during the inauguration of "Jayendram" and the Constitutional Park at the Sri Mahaswami Vidhya Mandir School Campus in Rajakilpakkam, Chennai, on 1-12-24. The event was presided over by HE The Governor Sri Ariff Md Khan, with the presence of Hon. Chief Justice Sri. KRShriram and Sri Sacchidanand Bharathi from Edneer Mutt.





குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேஶ்வர: |

குருஸ் ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: ||


ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |

நமாமி பகவத்பாத சங்கரம்

லோக சங்கரம் ||


அபார கருணாஸிந்தும் ஞானதம்

சாந்தரூபிணம் |

ஶ்ரீ சந்த்ரசேகர குரூம் ப்ரணமாமி

முதாந்வகம் ||


தேவே தேஹே ச தேஶே ச பக்த்யாரோக்ய ஸுகப்ரதம் |

புதபாமர ஸேவ்யம் தம்

ஶ்ரீ ஐயேந்த்ரம் நமாம்யஹம் ||


ஸதாஶிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம் |

அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம்

வந்தே குரு பரம்பராம்


நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில நீங்காதான் தாள் வாழ்க!!


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.


மும்பை முகாமிலே வி.சங்கர் அவர்களுக்கு நம்முடைய புதுப்பெரியவர்கள் ‘குரு கைங்கர்ய சக்கரவர்த்தி’ என்று ஒரு விருதை அளித்து ஆசிர்வதித்தார்கள். அந்த ஆசிர்வாத அனுக்ரஹத்தின் தொடர்ச்சியாக பல்வேறு அறப்பணிகளை, அரிய பணிகளை,  பலரும் அறிந்து கொள்ள வேண்டிய பணிகளை, பலரும் ஆற்றிய நல்ல பணிகளை, உலகத்திற்கு உணர்த்தக்கூடிய, உலகத்திலே ப்ரபலப்படுத்தக்கூடிய பல்வேறு பணிகளை, அது தேச நலனுக்காக பாடுபட்ட ராணுவ வீரர்களாக இருக்கட்டும், கர்நாடக சங்கீதத்திற்காக செய்தவர்களாக இருக்கட்டும், பல்வேறு பொது சேவையை, அது சிறிய குழந்தைகள் செய்திருந்தாலும் சரி, வசதியானவர்கள் செய்திருந்தாலும் சரி, இப்படி உலக நன்மைக்காக பாடுபட்ட, பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய பலரையும் அழைத்து, கௌரவித்து பல வருஷங்களாக ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமி நேஷனல் எமினன்ஸ் அவார்ட் என்பதாக கிட்டத்தட்ட ஒரு முப்பது வருஷங்களாக அந்த நிகழ்ச்சியையும், பல்வேறு துறைகளிலே அதாவது விஞ்ஞானத் துறையிலே, பொது சேவைத் துறையிலே, ஸத்ஸங்கம், பக்தி மற்றும் கலாசாரத் துறையிலே,  பொது வாழ்விலே அரசியல் உள்பட பொது வாழ்விலே சிறந்து விளங்கிய பலரையும் அழைத்து, கௌரவப்படுத்தி, இது போன்று பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி, எங்கிருந்து அவர் மேற்கு பகுதிக்குச் சென்றிருக்கிறாரோ மும்பைக்கு, இங்கே தெற்கிலிருந்து, இங்கு உற்பத்தி ஸ்தானத்திலே, வளர்ந்த இடத்திலே வறட்சி கூடாது என்பதற்காக, மிரட்சியும் இருக்கக்கூடாது, அதற்காக தர்மத்தையும் ரக்ஷிக்க வேண்டும் என்பதற்காக இந்த பகுதியிலே ‘தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!’ என்கிற இந்த தென்னாட்டிலே நம்முடைய பல புராதானமான பண்டைய கலாசாரங்களை நாம் மறந்து விடக் கூடாது, கலாசார சின்னங்களை அழித்து விடக்கூடாது, கலாசார பாரம்பர்யத்தை நாம் அக்கறையுடனும், பக்தியுடனும் தெரிந்து கொள்வதற்கும், அதை அனுசரிப்பதற்கும் வேண்டிய கல்வி ஸ்தாபனங்களை, அந்த காலத்திலே காஞ்சிபுரத்திலே கடிகாஸ்தானம் என்று ஒரு சரித்திர புகழ் பெற்ற நாலந்தா போன்ற ஒரு புகழ் பெற்ற தார்மீகமான கல்வி ஸ்தாபனம், சந்தேக நிவ்ருத்தி செய்வதற்கான பல்வேறு கலைகள், பல்வேறு தத்துவங்கள் இவைகளிலே, தற்போது கவர்னர் அவர்கள் சொல்லிக் கொண்டு வந்தார்கள் மஹாவாக்யங்கள் பற்றி எல்லாம். இப்படிப்பட்ட தத்துவ சாஸ்திரங்கள் உட்பட அந்த பாரதீய வித்யையை வளர்க்கக் கூடிய ஸ்தாபனங்கள் இருந்த ப்ரதேசமான இந்த பகுதியிலே ‘கல்வியில் கரையிலாக் காஞ்சி’ என்கிற இந்த தொண்டைமண்டல பகுதியிலே, தர்மமிகும் சென்னை என்கிற இந்த சென்னை மாநகரத்திலே நம்முடைய புதுப்பெரியவர்களுடைய அனுக்ரஹத்துடன் இது போன்ற இன்றைக்குத் தேவையான விஞ்ஞான படிப்பும், நிர்வாகப் படிப்பும், நிதி சார்ந்த படிப்பும், பூகோளம் சார்ந்த படிப்பும், ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்ட படிப்பும், நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட படிப்பும், நம்பிக்கை என்று நாம் எதை சொல்லி வருகிறோமோ, அதுவும் அறிவியல் சார்ந்த படிப்புதான். அந்த படிப்பையும் ஒரு சேர அளிக்கக்கூடிய ஒரு அழகான நல்ல கட்டமைப்புகள் infrastructure உடன் கூடிய ஆகர்ஷணத்துடன கூடிய இந்த காஞ்சி மஹாஸ்வாமி வித்யாமந்திர் என்கிற ஸ்தாபனத்தை தொடர்ந்து வருஷா வருஷம் அதை வளர்த்து மெருகூட்டிக் கொண்டு வருகிறார். இந்த இடத்திலே ஒரு பக்கம் தேசம், இன்னொரு பக்கம் கலாசாரம். அந்த தேசம் சார்ந்த பல்வேறு விஷயங்களை தேசத்திற்காக பாடுபட்டவர்கள், அதில் சட்டம், சமுதாய சேவை, தேச நலனிலே அக்கறை கொண்டு தியாகம் செய்தவர்கள், இப்படி இவைகளை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு ஒரு பக்கம் ‘ப்ரஹ்மக்ஷத்ரம்’ என்று சொல்வார்கள். அது போன்று தத்வத்திற்காக ஒரு பக்கமும், நம்முடைய உள்ளத்தைக் காப்பதற்காக ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் உலகைக் காப்பதற்காகவும், உன்னதமான நோக்கத்தைக் காப்பதற்காகவும், உள்ளத்தைக் காப்பது ஒரு பக்கம், உள்ளதையாவது காக்க வேண்டும். ஆயிரம் ஸாமவேதம் இருந்தது. இன்றைக்கு மூன்று ஸாமவேதம்தான் இருக்கின்றன. உள்ளதையாவது காக்க வேண்டும் என்பதற்காக இந்த அழகான இந்த campus ஐ, வளாகத்தை ஏற்படுத்தி, நிர்வகித்து, விஸ்தரித்து கொண்டு வருகிறார். இது நல்ல பணி.


இன்றைய தினம் இரண்டு நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சிக்காக தான் நாங்கள் கர்நாடகாவிலிருந்து இங்கே வந்திருக்கிறோம். கேரளா கவர்னர் அவர்கள் 1987 ம் வருஷம் காஞ்சிபுரம் வந்திருக்கிறார். அதற்குப் பிறகும் அவர் மத்திய அரசாங்கத்திலே மந்திரியாக இருந்த நேரத்திலேயும்  ஆழ்வார்பேட்டையிலே நம்முடைய புதுப்பெரியவர்கள் இருந்தபொழுது அங்கே வந்தார். நன்ன ஞாபகம் இருக்கு. ரொம்ப துடிப்பான இளைஞராக இருந்தார் அந்த நேரத்திலே . இந்த பொது வாழ்விலே புகழிலேயும் திகழ்ந்திருக்கிறார், அதே சமயம் இந்த புயலிலேயும் இந்த நிகழ்ச்சியிலே இங்கு வந்து பங்கு கொண்டிருக்கிறார். ரொம்பவும் சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடியவர். அந்த சமயம் புதுப்பெரியவா அவருக்கு மாலை கொடுத்தார், ஞாபகம் இருக்கு. அவரை உற்சாகப் படுத்தினார். இது போன்று ஆரம்ப காலத்திலிருந்தே பொது வாழ்விலே அவர் பல்வேறு மக்களுக்கு உபயோகப்படக்கூடிய பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இன்றைய தினம் அவர் முக்கிய விருந்தினராக வந்திருக்கிறார்.


அதற்காக தான் நாங்கள் ரெண்டு வாரமாக தர்மஸ்தலா, உடுப்பி அந்த ஊர்களுக்கெல்லாம் போய்ட்டு எடநீர் மடம் ஸ்வாமிகள் இன்று வந்திருந்தாரே அவருடைய ஊர் எடநீர் கேரளாவில் இருக்கு அங்கேயும் போயிட்டு வந்தோம். இந்த நிகழ்ச்சிக்காக தான் அங்கிருந்து வந்தது.


இதிலே இரண்டு நிகழ்ச்சிகள். ஒன்று constitution பற்றிய நிகழ்ச்சி. இரண்டாவது ‘ஜயேந்திரம்’ என்கிற அந்த கண்காட்சியினுடைய திறப்பு விழா. முதல் விஷயம் நம்முடைய தமிழ் நாட்டிற்கு பல வருஷங்களுக்குப் பிறகு, தமிழ் பேசக்கூடிய நம்முடைய தலைமை நீதிபதி அவர்கள் வந்திருக்கிறார்கள். அவருடைய தகப்பனார் 1980s ல 85, 86, 87 ஆகக் கூட இருக்கலாம், 84ம் வருஷம் கர்னூலிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்தோம். தொடர்ந்தாற்போல் நாலஞ்சு வருஷம் அங்கே இருந்தோம். அந்த சமயத்திலே ஒரு ‘வ்யாஸ பாரத கலாதி சில்ப ஸதஸ்’ என்று ஒன்று காமாக்ஷி கோவில் பக்கத்திலே இருக்கக்கூடிய SSKV ஸ்கூல்ல நடந்தது. அந்த சமயத்திலே பாஞ்சராத்ரம், வைகானஸம், சைவாகமம், தெருக்கூத்து இப்படி பல நிகழ்ச்சிகள் நடந்தது. ஸதஸ் நடந்தது. அந்த சமயத்திலே கலை நிகழ்ச்சிகளும் இருந்தது, தக்ஷிணாமூர்த்தி அரங்கத்திலே. அதிலே ‘சாக்கியார் கூத்து’ என்கிற கலை நிகழ்ச்சி இருந்தது. அதற்கு இவருடைய அப்பா ராஜன் பாம்பேயிலிருந்து சாக்கியார் கூத்து ராஜன் என்று பேரு. அவர் அப்போ ஒரு தாம்பாளத்தின் மேலே நின்னு நாட்டியம் எல்லாம் பண்ணி, அந்த நிகழ்ச்சி எல்லாம் நடத்தினார். அப்போ பழக்கம். அப்புறமும் பம்பாயிலே நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கார். அதிலே இவரும் ஒரு கலைஞராக இடம் பெற்று, அதுதான் இன்னிக்கு அழகாக பேசினார். அவரும் இங்கே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மிகவும் பொருத்தமானது மற்றும் பெருமையானது.


இந்த நிகழ்ச்சியானது constitution பற்றியது. அந்த முன்ஜாக்கிரதை preventive.  நம்முடைய மஹாபெரியவர்கள் அந்த காலத்திலே, கும்பகோணத்திலே வசித்த காலத்திலே இதை ஒரு தற்காப்பு, அந்த முன்யோஜனையுடன், முன்ஜாக்ரதையுடன் இந்த அரசியல் ஸாஸனத்திலே இந்த சமய நம்பிக்கைகள் காக்கப்பட வேண்டும், சாஸ்த்ரங்கள் காக்கப்பட வேண்டும். அதாவது தர்ம ஸ்தாபனங்கள், அரசாங்கத்தையும் சரி, சட்டங்களையும் சரி கௌரவப்படுத்துகின்றன, மதிக்கின்றன. அதே சமயத்திலே சட்டம் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். நம்முடைய பழக்க வழக்கங்களையும் பாதுகாக்க வேண்டும். சட்டம், சமுதாயம், சாஸ்த்ரம் இந்த மூன்றுக்கும் ஒரு நிலை எப்படி இருக்கிறது என்று யோசிக்கும்போது அவர்கள் அந்த தீர்க்கதரிசனத்துடன் அன்றைய காலகட்டத்திலே இந்த அரசியல் ஸாஸனத்திலே அவர்களுடைய வாசகம் இடம்பெற்று இருக்கிறது. எண்ணம் மாத்ரம் அல்ல, அவர்களுடைய வாசகமும் அதிலே இடம்பெற்று இருக்கிறது. அப்படிப்பட்ட அதன் பயனாக பல்வேறு குழப்பங்களையும், சவால்களையும், தடைகளையும், சில சமயத்திலே தெரிந்தோ தெரியாமலேயோ ஏற்படக்கூடிய தீங்குகளையும் தாண்டி இந்த கலாசாரம் ஓரளவுக்காவது பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றால் எப்படி இறைவனுக்கு கவசம் இருக்கிறதோ, ஸ்தோத்ரங்களிலே கவசம் இருக்கிறது, விக்ரஹங்களுக்கு கவசம் இருக்கிறது, அது போன்று தர்மத்தைக் காக்கக்கூடிய கவசத்தை நம்முடைய காஞ்சி மஹாஸ்வாமிகள் அவர்கள் அரசியல் ஸாஸனத்தின் மூலமாக நமக்கு அளித்திருக்கிறார்கள். அப்படி முன்கூட்டியே அவர்கள் யோசித்த அந்த ஞானம். ஏனென்றால் இவர் ராஜ்யபால் கவர்னர் அவர்கள் சொன்ன உயர்ந்த தத்வங்கள் சிறப்பாக இருந்தாலும் மஹாவாக்யங்கள், பகவத் கீதை இன்றைக்கு அவர் வந்து என்ன உபன்யாஸம் பண்ணினார்னு எப்படி எடுத்துக்கறதுன்னா (சிரித்தபடி) பகவத்கீதை உபன்யாஸம் பண்ணினாரா,  அத்வைத உபன்யாஸம் பண்ணினாரா இல்லை constitution பத்தி உபன்யாஸம் பண்ணினாரா, இப்படி ஒரு சிறந்த அறிஞராக இன்றைய தினம், அதாவது அரசர்களிலேயும் அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால அவர் வந்து ராஜ்யபாலா இருந்தும் ஞானத்தைப் பத்தி இன்றைய தினம் பேசியது அந்த ஸ்தானத்தினுடைய கௌரவத்தை மிகவும் உயர்த்தி இருக்கிறது. இப்படி இந்த நேரத்திலே அந்த constitution ஐப் பொறுத்த வரையிலே, நம்முடைய தர்மங்கள், கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற பாவார்த்தம், அதாவது சாஸ்த்ரங்களிலே ஶப்தார்த்தம் என்பது ஒன்று, லக்ஷ்யார்த்தம் என்பது ஒன்று, பாவார்த்தம் என்பது ஒன்று. கௌரார்த்தம் என்பது ஒன்று. ஶப்தார்த்தம் - இந்த பதத்திற்கு இது அர்த்தம் என்பது ஒன்று. லக்ஷ்யார்த்தம் - இதைக் குறிக்கோளாகக் கொண்டு சொல்லப்பட்டது. கௌரார்த்தம் - பாக்தம் என்று அதைச் சொல்வார்கள், இப்படியும் சொல்லலாம், அப்படின்னு ஒரு மாதிரியானது. இப்படி இந்த ஆத்மா என்று சொல்கிறார்களே, அந்த அரசியல் ஸாஸனத்தினுடைய ஹ்ருதயமானது கலாசாரத்தையும் புறக்கணிக்ககூடாது. அனைவருக்கும் புரஸ்காரம் அளிக்கக்கூடிய தேசம்தான் இதுவே தவிர, திரஸ்காரம் அளிக்கக்கூடிய தேசம் இதுவல்ல. இப்படி திரஸ்கரணி என்று ஒரு வித்தை இருக்கிறது, அது வேற. ஆனால், திரஸ்காரம், புறக்கணிப்பது என்பது நம்முடைய நாட்டிலே அனைவரையும் கௌரவப்படுத்தக்கூடிய தேசமாக, அனைவரையும் ஒருங்கிணைத்து inclusive growth என்று எதை சொல்கிறார்களோ, அப்படிப்பட்ட கலாசாரம், இந்த கவர்னர் சொன்னாரே 1950s லே United Nations லே Rights ஐ பத்தி எல்லாம் பேசறதுக்கு முன்னாடியே நம்முடைய 40s லே நம்முடைய தேசத்திலே இந்த awareness ஜாக்ரதி என்பது ஏற்பட்டிருக்கிறது. அது மாத்ரமல்ல, நம்முடைய சங்கர் அவர்கள் பேசும்பொழுது, அவர் நிறைய பேருக்கு surprise இன்னிக்கு நிகழ்ச்சியிலே புரஸ்காரம் பண்றது எல்லாம் ஒவ்வொரு படங்களிலிருந்து ஆரம்பிச்சு எல்லாமே surprise ஆக இருந்தது. இதிலே அந்த தஞ்சாவூர் பெயிண்டிங் ஒவ்வொண்ணும், எதையும் அழகா, விசேஷமான, பெருமிதத்தோட பண்ணக்கூடிய பழக்கத்திலே, அதிலே இன்னிக்கு மிக சிறப்பான ஒரு திட்டம். இன்னிக்கு பாம்பே சங்கர் சொல்லி இருக்கார் ‘ஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் வேத வித்யா பீடம்’ என்பதாக. அது பல இடங்களிலே நம்முடைய புதுப்பெரியவர்களுடைய நாறாவது அதாவது ஶதாப்தியை கொண்டாடக்கூடிய நேரத்தில், பல கிட்டத்தட்ட நூறு அந்த வேத வித்யா பீடங்களை அமைக்க வேண்டும். அவர்கள் சஞ்சாரம் செய்த இடங்களில் எல்லாம் அமைக்க வேண்டும் என்ற ஒரு நல்ல அரிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அப்போ சொல்லும்பொழுது அவர் சொன்னார், கலாசாரத்தை தெரிவிக்கக்கூடிய தூதுவர்கள். அந்த கலாசார தூதுவர்கள் என்ற வார்த்தையை ஒரு வேத பாடசாலையிலே கும்பகோணத்திலே 1947 ம் வருஷம் பிப்ரவரிலே பெரியவா சொன்னார். அதிலே ஆகஸ்ட் ல தான் இந்த Independence வரது. ஒரு அஞ்சாறு மாசம் முன்னாடியே நம்முடைய தேசத்தினுடைய நன்மைக்காக political ambassadors இருக்கறதோட சேர்த்து கலாசார தூதுவர்களும் தேவை அப்படீங்கறதை Indo-China area லே அவா வேலை செய்யணும். சிறிய சிறிய வித்தியாசங்களை நாம் பெரிது படுத்தாமல் greater understanding னு இன்னிக்கு நாம் எதைச் சொல்லிண்டு இருக்கோமோ அந்த அபிப்ராயத்தை கும்பகோணத்திலே ஒரு வேத பாடசாலையிலே ப்ரவசனம் பண்ணும் பொழுது பெரியவா வந்து சொல்லி, அந்த மாதிரி ஒரு விசாலமான ஒரு கண்ணோட்டத்துடன் அவர்களுடைய ஒரு சிந்தனையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அந்த மாதிரி தர்மம் சம்பந்தப்பட்ட கலாசார தூதுவர்களை தயார் செய்யக்கூடிய, அவர்களுக்கு கணிதம், இங்கிலீஷ் அதையும் சொல்லிக் கொடுத்து, அதே போன்று வெளிநாட்டு மனுஷாளுக்கு ப்ரசாரம் பண்றதுக்காக இங்கிலீஷில் விவேகானந்த ஸ்வாமி அமெரிக்காலே பண்ணினார் என்ற விஷயம் வேற. இன்னிக்கு நம்ப குடும்பங்களிலேயே இங்கிலீஷ் பேசினாதான் சுலபமா புரியறது என்கிற நிலைமை இருக்கு. நம்முடைய தமிழையும் நாம் கத்துக்க வேண்டியதுதான், ஸம்ஸ்க்ருதத்தை அவசியம் கத்துக்கணும், இங்கிலீஷ் கத்துக்கலாம். இப்படிப்பட்ட கலாசார தூதுவர்களை தயார் செய்வதற்கு ஒரு சிறப்பான திட்டமாக இதை அறிவித்திருக்கிறார்கள்.


அந்த constitution என்பது மேலும் மேலும் நம்முடைய கலாசாரத்தை நாம் பின்பற்றுவதற்கு உறுதுணையாக இருந்து, சட்டத்திற்கு துணையாக சமயம் இருக்கிறது, சமயத்திற்கு துணையாக சட்டமும் இருந்து, சமுதாயம் அதனால் நலனைப் பெற்று, இப்படி அந்த திரிவேணி என்கிற நல்ல நிலை ஏற்பட வேண்டும். அதிலே நமக்கு முன் பேசியவர்கள் ப்ரசங்காத் ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். முன்னாடியே நம்ப யோசிச்ச விஷயம் தான். நடுவிலே வந்த உடனே இது ஒரு உற்சாகத்தை அளித்தது. இவர் கொடுத்த Constitution என்ற அந்த புஸ்தகத்திலே Article 48ல


Organisation of Agriculture and Animal husbandry.


The states are empower to organise Agriculture and Animal  husbandry on modern and scientific line of ….. in particular


 அப்படின்னு சொல்லி


Take steps for preserving and improving the breeds and prohibiting the slaughter of cows and calves and other ……..


அதாவது கறவை நின்று போன மாடுகளைக்கூட நிச்சயமா கவனிக்கணும் அப்படின்னு சொல்லி அதிலே விவரமா சொல்லி இருக்கா. நம்ப கறக்கரதையும், சுரக்கரதையும் தான் பார்க்கறோம் இப்போ உள்ள சமுதாயத்திலே. இந்த ஒரு விஷயத்தையும் இன்றைய காலகட்டத்திலே நாம அதை விசேஷமாக கவனிச்சு என்ன முடியுமோ, அதுக்கு எல்லா கட்சிகளும் சேர்ந்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நிலையிலே இதை யோசிக்கணும். இந்த கட்சி, அந்த கட்சி என்று இல்லை. இதற்காக மஹாபெரியவர்கள் வெளிநாட்டிலே இருந்து அந்த princess மூலமாக நூறு பசுமாடுகளை விமானத்தில் வரவழைச்சு இங்கே ஊட்டி, அஸ்ஸாம் அங்கெல்லாம் கொடுத்து இருக்கா. அதனால கலாசார விஷயத்திலேயும் நாம சுத்தி இருக்கக்கூடிய விஷயங்களை 75 வருஷம் ஆயிடுத்து. அதனால அதை ரொம்பவும் தள்ளி போடாமல் தேசம் முன்னேறரது, முன்னேறரதோட சேர்த்து நெறிகளும் முன்னேற வேண்டும். வெறிகள் கூடாது, நெறிகள் வேண்டும். அந்த நெறிகள் இருந்தால்தான் அந்த வெறி என்பது இல்லாமல் வெற்றி நமக்கு கிடைக்கும்.


அந்த வெற்றிக்காக தான் ஜயேந்திரர் என்ற பேரு. நம்முடைய பெரியவா புதுசா, அந்த காலத்திலே பரம்பரையா வெச்ச பேருல புதுசா வெக்கணும்னு அந்த ஜய வருஷம்னு தமிழ் வருஷத்திலே பேரு. அந்த ப்ரபவ, விபவ, நவ, யவ, ஆங்கீரஸ என்கிற 60 வருஷங்களில் ஜய வருஷம் மஹாபெரியவா பிறந்த வருஷம் அது. அவாளுடைய ஷஷ்டி அப்த பூர்த்தி வருஷத்திலே இவாளுக்கு ஸன்யாஸம் கொடுத்து,  ஜயேந்திரர்னு பேரு கொடுத்தார். ஜய என்பது அவா இவாளுக்கு கொடுத்த ஆசிர்வாதம். அதனால அவா எல்லா ஊரும் including கைலாச மானஸரோவர் எல்லா ஊருக்கும் போயிட்டு வந்து நம்முடைய தேசத்திலே வடக்கும், தெற்கும் மிகவும் அந்யோன்யமாக இருப்பதற்கு பாடுபட்டவர் நம்முடைய புதுப்பெரியவர்கள். இல்லேன்னா உத்தர ப்ரதேசத்திலே இருந்த Arif Mohammad Khan கவர்னர் வந்து விசேஷமாக இந்த நிகழ்ச்சியிலே கலந்துண்டு இருக்கார் என்றால் அந்த ஜனாகர்ஷண சக்தி நம்முடைய புதுப்பெரியவாளுடைய ஜனாகர்ஷண சக்தி. சங்கராச்சார்யாள் தனாகர்ஷண யந்த்ரம், ஜனாகர்ஷண யந்த்ரம் எல்லாம் ஸ்தாபிச்சார் நாம இதிஹாசங்களிலே கேட்கிறோம். அது நாம பார்த்த ஜனாகர்ஷணம், தனாகர்ஷணம் மடத்தை பொறுத்த வரைக்கும் நம்முடைய புதுப்பெரியவர்கள். அப்படி அந்த அளவுக்கு அவ்வளவு பண்ணி இருக்கா அவா. யார் சின்ன சின்ன சேவை உதவிகள் பண்ணி இருந்தாலும் அதை நம்முடைய மஹாபெரியவர்கள் மறக்கறது இல்லை. சின்ன சேவை ஏதாவது பண்ணி இருந்தாலும், அவா ஏதோ வைக்கல் வாங்கி போட்டிருப்பா, இல்லேன்னா சின்ன தர்மங்கள் ஏதாவது பண்ணி இருப்பா. அதை எத்தனையோ அம்பது வருஷம் கழிச்சும் அந்த உதவியை அவா மறக்கறது இல்லை. அதே மாதிரி சமுதாயத்திலே யார் வந்து கேட்டாலும் உதவிகளை செய்வதற்கு, அவர்களை கௌரவிப்பதற்கு, அது ஏழையோ, பணக்காரனோ, தொழிலாளியோ, ஜமீன்தாரோ அனைவரையும் கௌரவப்படுத்துவதற்கு, அங்கீகரிப்பதற்கு நம்முடைய புதுப்பெரியவர்கள் மறுப்பதில்லை. அவர் வந்து உதவியை மறப்பதில்லை. இவர் வந்து சமுதாயத்தில் அனைவருக்கும் நன்மை செய்வதற்கு மறுப்பதில்லை. அதனாலே அந்த்யோதயா என்று நாம எதைச் சொல்கிறோமோ, ஏகாத்…….. எதைச் சொல்கிறோமோ எல்லாவற்றையும் implement பண்ணிக் காட்டியவர் நம்முடைய ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள். சொல்றது மாத்ரமல்ல, செய்து காமித்தவர். காண்பிப்பதற்காக செய்வது என்பது வேற, செய்து காண்பிக்கறது வேற. இப்படி நம்முடைய புதுப்பெரியவர்கள் எல்லா ஊருக்கும் சஞ்சாரம் பண்ணி, அங்கே வடநாட்டுக்குப் போய், ஹிந்தியிலே பேசி எல்லாம் பண்ணி அங்கே கும்பமேளாவிலே கலந்துண்ட தென்னாட்டிலேர்ந்து கலந்துண்ட சங்கராச்சார்யாள். இப்படி ஸௌத் & நார்த்க்கு ஒரு பாலமாக இருந்து, இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் ஒரு ஸௌஜன்யம் கிடைப்பதற்காக அந்த அயோத்யா சந்தர்ப்பத்திலே எல்லாம் முன்முயற்சி எல்லாம் பண்ணி, இப்படி அந்த புன்முறுவல், அந்த காமாக்ஷி அம்மனுடைய மந்தஹாசம் என்று எதை நாம் பக்தி பூர்வமாக பார்க்கிறோமோ, அதே மாதிரி அந்த சமுதாயத்திலே, முராரி பாபுனு ஒரு ப்ரவசனகாரர் சொன்னார் ஹிந்திலே ப்ரபலமானவர். ‘முஸ்குராத் தேஹே’ என்று அவருடைய சிரிப்பு எல்லாருடைய தாபத்தையும் போக்கிற அளவுக்கு ரொம்பவும் சந்தோஷமான விஷயம். இப்படி சமுதாயத்திலே நல்லது செய்யணும் என்பதற்காக, சிலபேருக்கு இரக்கமின்மையாக இருக்கலாம், ஆனால் இவருக்கு உறக்கமின்மை. அவ்வளவு உற்சாகத்தோட எப்பவும் வேலை பண்ணி, அப்படித்தான் நம்பளுக்கு இவா குஜராத்திலே இருக்கும்போது பரிச்சயம் ஏற்பட்டது. இங்கே தமிழ்நாட்டிலேயும் பார்த்திருக்கிறோம், அதுக்கு அப்பறமா குஜராத்திலே புதுப்பெரியவா யாத்திரையில் இருந்தா. அந்த சமயத்திலே ரொம்பவும் காலம்பரத்துலேந்து ஆரம்பிச்சு சாயங்காலம் வரைக்கும் ப்ரோக்ராம். அப்போல்லாம் நடந்து போவா. அப்போ நடந்து போகும்போது ஊஜ்ஜானு ஒரு இடம், …….டிஸ்ட்ரிக்ட். அங்கே யானையோட எல்லாம் வந்திருக்கா. முதலில் ஒரு ஊருக்குப் போனோம். அங்கே போனபோது ஸ்வாமிகள் இன்னிக்கு வரமாட்டார், முன்னாடி ஊர்லேயே இருக்கணும்னு சொல்லிட்டார். அதனால நாளைக்குத் தான் வருவார் ஸ்வாமிகள் அப்படின்னா. பாம்பே வழியாதான் போனோம் சங்கர மடம் எல்லாம் பார்த்துட்டு தான் போனோம். அப்போ போனபோது வந்தார். வந்த உடனே அந்த ஊர்லே நன்னா கவனிச்சுண்டா குஜராத்லே.‌ எல்லாம் சாப்பாடுக்கு வேணுங்கறது எல்லாம் என்ன வேணுமோ, அதாவது விருந்தோம்பல் - பாஷை வேற, எல்லாம் வேற. இந்த ஊர்லே இண்டியாவிலே அந்த ஆதித்யம் என்பது ரொம்ப விசேஷமா இருக்கு. நாளைக்கு வருவார் ஸ்வாமிகள்னா. வந்தார். யானை லாரிலே வந்தது. அதை மேடாக இருக்கற இடத்திலே அந்த யானையை இறக்கி அழைச்சுண்டு வந்தா. கோ பூஜை, கஜ பூஜை எல்லாம் ஆச்சு. கஜ பூஜை எல்லாம் இருக்கும்போது பூஜைலே உட்கார்ந்திருந்தோம். அப்போ ஸம்ஸ்க்ருதத்திலே சொன்னா, பூஜைக்கு உட்காரரதுக்கு முன்னாடி ‘வோ ஆஹாரம்’  அப்படின்னு ஏதோ சொன்னார். அந்த பசுமாடு கோ பூஜைக்கு  வெயிட் பண்ணும்போது சொன்னார். அப்பறம் மடத்திலேருந்து அதுக்கு கறிகாய் தோலி எல்லாம் கொண்டு வெச்சா. Particular ஆ அந்தந்த நல்ல கார்யங்கள் அப்பப்போ நடக்கணும் என்பதில் அவருடைய அக்கறையை அப்போ பார்த்தோம் அந்த காலத்திலே. அதே மாதிரி அந்த கஜ பூஜை எல்லாம். Gir forest ல கூட பத்திரமா யானை எல்லாம் அழைச்சுண்டு போய் திருப்பி கொண்டு வந்திருக்கா அவா. அப்படி அந்த கோ பூஜை கஜ பூஜையை ஆயிரம் இடத்திலே நடத்தி, க்ராமந்தோறும் எல்லார்க்கும் தீர்த்த ப்ரஸாதம் தானே கொடுத்து micro charity, அதாவது micro finance என்று சொல்றாளே அது போல அந்த micro charity. அதுக்கு இருவது ரூபாய் கொடுக்கறவா, அம்பது ரூபாய் கொடுக்கறவா எல்லார்க்கும் தன் கையாலேயே குங்கும ப்ரஸாதம் தன் கையாலேயே கொடுத்து, வ்ருத்தாச்ரமம் நடக்கிறது, பாடசாலைகள் எல்லாம் நடக்கிறது அதுக்காக. இப்படி ஜனங்கள் கிட்டே ரொம்பவும் ப்ரியமாக இருந்து, அந்த ப்ரியத்தின் மூலமாக நம்முடைய தர்மத்தை விசேஷமாக ப்ரசாரம் பண்ணி, க்ராமம் க்ராமமாக நடக்கற இடத்திலே தரிசனங்கள் கொடுக்கணும் என்பதற்காக ஒரு சேரைப் கூடவே வந்துண்டு இருக்கும். கூட்டமாக இருந்தால் சேர் மேலே நின்று தரிசனம் கொடுத்து, இப்படி நிறைய விஷயங்களை, அனைவருக்கும் வாய்ப்பை அளித்தவர், அனைவருக்கும் வசதி அளிப்பது ஒன்று;அனைவருக்கும் வாய்ப்பையும் அளித்து, இந்த தமிழ்நாட்டிலே விசேஷமாக இந்த பத்ம வ்யூகம், சக்ர வ்யூகம், சகட வ்யூகம், இன்னும் பல வ்யூகங்கள் இருக்கிற இந்த இடத்திலே அவா வந்து  யூகங்களுக்கு இடம் கொடுக்காம தர்மத்தை விசேஷமாக நடத்தி காமிச்சு, இந்த இடத்திலேயே இருந்து, எத்தனை கோவில் கும்பாபிஷேகங்கள், எத்தனை திருப்பணிகள், ஓதுவார்களுக்கு உதவி, பஜனை பண்றவாளுக்கு உதவி, கடன் உதவி, ஒரு தடவை அந்த பைரோன் சிங் ஷெகாவத் என்று ராஜஸ்தான் chief minister இருந்தார். கடன் யாரெல்லாம் திருப்பிக் கொடுத்தாளோ அவர்கள் எல்லோரும் கலை நிகழ்ச்சிகள் இந்த காங்கிரஸ் மைதானத்தில் எம்.ஜி.ஆரை வரவழைச்சு இங்கே நடத்தி, இந்து சமய கலைவிழா என்று அந்த ஒரு நிகழ்ச்சி. இப்படி எல்லாம் ஏழைகள், க்ராமத்திலே இருக்கிறவா, இவா அவா என்றில்லாமல் அந்த அத்வைதம் என்பதை ஜனங்களுக்கு எல்லாம் புரியும்படியாக பண்ணினவர். வாக்யங்கள் ஸம்ஸ்க்ருதத்திலே எல்லாம் இருந்தாகூட பொது வாழ்விலே அனைவருக்கும் பதவி என்பது உதவிக்காக என்பதை தெரியப்படுத்தியவர் நம்முடைய புதுப்பெரியவர்கள். பதவி என்பது அதிகாரத்திற்காக அல்ல, ஆடம்பரத்திற்காக அல்ல, பிறருக்கு உதவி செய்வதற்காக என்பதை எளிமையாகவும் நடந்து கொண்டு, பண்பாகவும் நடந்து கொண்டு, சாதுர்யமாகவும் நடந்து கொண்டு, சௌஜன்யமாகவும் நடந்து கொண்டு உத்தேசம் மக்களுக்கு நல்லது செய்யணும். இந்த மாதிரி ஒரு நல்ல அபிப்ராயத்தோட இந்த கண்காட்சி மிகவும் அவசியமான ஒன்று. ஏன்னா கெட்ட விஷயங்கள், நல்லதில்லாத விஷயங்கள் ஜனங்கள் ஞாபகம் வெச்சுக்கறது வேற. நல்ல விஷயங்கள் இருக்கு. இந்த நேரத்திலே நல்லதை நினைவு படுத்த வேண்டிய அவசியம் என்பது இருக்கு. அதனால பாம்பே சங்கர் இங்கே வந்து இந்த மாதிரி ஜயேந்த்ரம் என்கிற ஒரு ஏற்பாட்டை அழகாக பண்ணி இருக்கார். அவர் கண்காட்சிகள் பண்றதுலே ஒரு பெரிய expert. அதுக்கான expenses உம் சாதாரணமல்ல.  அதையும் அவர் விசேஷமா பண்ணிண்டு இருக்கார். Expert ஆகவும் இருக்கார்,  expenses ஐயும் நிறைய பண்ணிண்டு இருக்கார். இந்த வித்யாலயத்தை extension உம் பண்ணிண்டு இருக்கார். ஆரம்பத்திலே ஜுஜூடி என்கிற பூனா பக்கத்திலே அவர் factory கட்டிண்டு இருந்தபோது கண்டோபா என்கிற மந்திருக்கு வந்தோம். அந்த சமயத்திலேந்து பார்த்துண்டு இருக்கோம். ஒவ்வொரு நல்ல விஷயங்களாக பண்ணி, இது விசேஷமாக பண்ணி நல்ல முறையிலே பல துறை வல்லுனர். பலதுறை வல்லுனர்களுக்கும் ஆதரவாக, அனுகூலமாக எல்லாம் பண்ணிண்டு இருக்கார். Tribal welfare லே இருந்து ஆரம்பிச்சு tradition preservation வரைக்கும் A to Z மஹாராஷ்ட்ராவிலே tribal village எல்லாம் adopt பண்ணிண்டு அந்த வேலை எல்லாம் கூட பண்ணிண்டு இருக்கார். அது மாதிரியான தலைமை நிறைய வேண்டும். நம்மூர்லே தலைகள் நிறைய இருக்கு, தலைமை நிறைய வேணும். தலைமைகள் வருவதற்கு நிறைய நல்ல எண்ணங்கள் வேணும். நல்ல எண்ணங்களுக்கு நிறைய inspirations வேணும். அந்த மாதிரி ஒரு நூறாண்டு என்பது நம்முடைய பெரியவாளும், நம்முடைய புதுப்பெரியவாளும் செஞ்ச நிறைய பணிகள் தமிழ்நாடை அந்த National mainstream லே இருக்கும்படியாக பண்ணி இருக்கா. அது ஒரு விஷயம். அதனால இந்த கலாசார map ல தமிழ்நாடு தொடர்ந்து இருக்கும்படியாகவும், முக்யமாகவும் இருக்கும்படியாக பண்ணி இருக்கா. அதனால தமிழ்லேருந்து ஆரம்பிச்சு எல்லாத்தையும் காப்பாத்தி திருப்பாவை, திருவெம்பாவை, ராம நாம லேகனம். இதெல்லாம் வந்து  பணத்தை வெச்சுண்டு, அதிகாரத்தை வெச்சுண்டு, செய்ய வேண்டியவா செய்ய தவறியதை, தவறாக செய்ததை சீர்திருத்தம் என்று சொன்னா இதுதான் நிஜமான சீர்திருத்தம். அதனால இந்த விஷயத்திலே தமிழ்நாட்டிலே அவா பண்ணி இருக்கக்கூடிய விஷயங்கள் ஜனங்கள் ஆதரிக்கிறாளா, ஆதரிக்கலையா, ஏத்துக்கறாளா, ஏத்துக்கலையா, அரசாங்கம் எப்படி இருக்கு என்று எதைப் பத்தியும் பார்க்காமல் அவா வந்து எல்லாருடைய சௌர்யத்துக்காக வித்யா, வைத்யம், வேதம். இப்படி இந்த தமிழ்நாட்டினுடைய பெருமை, இந்தியாவினுடைய பெருமை இதெல்லாத்தையும் நன்ன கவனிச்சு, அவா சொன்னாளே வசந்தவல் லோக ஹிதம் சரந்த: அப்படின்னு லோக ஹிதத்துக்காக எல்லாம் பண்ணி இருக்கா.


இந்த மாதிரி ஒரு நல்ல நிகழ்ச்சியை அழகாக நடத்தி இருக்கிறார்கள். இதற்கு இந்த பேரும் நல்லது. நம்முடைய கேரளாவில் இருந்து கேசவானந்த பாரதி ஸ்வாமிகளுடைய சிஷ்யர். பல்லக்கிலே உட்கார்ந்து பேசும்போது மஹாபெரியவா கேசவானந்த பாரதி ஸ்வாமிகள் பத்தி ரொம்ப சொல்லி இருக்கா. திரும்ப திரும்ப அவர் பேரைச் சொல்றாரே அவர் யாரு என்று அப்போ நமக்கு பழக்கம் இல்லை. அப்பறமா சில வருஷங்கள் கழிச்சு அவர் பழக்கமானார். நன்றாகப் பாடக் கூடியவர். நன்றாக பக்தி ப்ரசாரம் பண்ணக் கூடியவர். சென்னைக்கு பக்கத்திலே காட்டுபள்ளி என்கிற ஊரிலே மஹாபெரியவா வந்தபொழுது, கன்னடத்திலேயே பெரியவா பேசினார். அதைப்பத்தி கேசவானந்த ஸ்வாமிகள் சொல்லும்பொழுது ‘அந்த காலத்திலே இங்கே வந்தேன் அப்போ சில யோசனைகள் எல்லாம் பெரியவா சொன்னா. சில பேர்கிட்டே சொல்லி சௌர்யம் எல்லாம் பண்ணிக் கொடுக்க சொன்னார்’ என்று இதெல்லாம் அவர் சொன்னார். இப்படி யாராவது ஒருத்தர் முயற்சி பண்ணினாதான் அது வந்து மத்தவாளுடைய பார்வைக்கு வரக்கூடிய நிலையிலே சந்தர்ப்பங்கள் இருக்கறதாலே அப்படி பண்ணி இருக்கார். நிலத்தை நாம காப்பாத்தினால் தான் நாம வந்து நிலத்திலே நடக்க வேண்டிய நல்ல கார்யங்களையும் காப்பாத்த முடியும். இப்படி இந்த விஷயத்துக்காக அவர் நிறைய பாடுபட்டிருக்கார். அதனால அந்த ஸ்வாமிகளும் இங்கே வந்தது இந்த constitution சம்பந்தப்பட்ட  lawn திறப்பு விழாவுக்கு கேரளாவிலிருந்து அவர் வந்ததும் நல்ல விஷயம்.

(தற்போதய எடிநீர்  மட ஸ்வாமிகளின் குருநாதர் ஶ்ரீ கேஸவானந்த பாரதி அவர்களை அரசியல் சட்டத்தில் சமய ஸ்தாபன விவகாரங்களில் உள்ள உரிமைகளை நிலை நாட்டிட உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க அறிவுறுத்தி landmark judgment பெற வைத்தது நம் மஹாஸ்வாமிகள்).


இன்னிக்கு முக்யமாக எல்லாம் கேரளாதான். ஸ்வாமிகள் கேரளாவிலிருந்து, ராஜ்யபால் கவர்னர் கேரளாவிலிருந்து, அதுக்கப்பறம் இங்கே நமக்கு Chief Justice ஆக வந்திருக்கக்கூடியவரும் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இப்படி நம்ப ஆதிசங்கராச்சார்யாளும் கேரளாவிலிருந்து வந்தவர்தான். இந்த நிகழ்ச்சி நல்ல முறையிலே சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. இனி வரக்கூடிய காலங்களிலே சாஸ்த்ரமும் வளற வேண்டும், சட்டத்தினுடைய மாண்பும் மதிக்கப்பட வேண்டும், சமுதாயத்திலேயும் உயர்ந்த சித்தாந்தங்கள் ஏற்பட்டு அந்த உயர்ந்த பொறுப்பை கொடுத்திருக்கிறார்கள் constitution லே. பதினெட்டு வயசு ஆனவாளுக்கு எல்லாம் vote போடுவதற்கு. கவர்னர் பேசும்பொழுது அமெரிக்காவில் democracy வந்து நூறு வருஷம் கழிச்சு women க்கு rights எல்லாம் கொடுத்திருக்கா என்று சொன்னார். காளிதாசர் சொல்றார் படிக்காமலே கெட்டிக்காரா பொம்மனாட்டிகள் என்று. அந்த அளவுக்கு ‘ஸ்த்ரீநாம் அஸிக்ஷித படுத்வம்’ அப்படின்னு காளிதாசர் சொல்றார். நம்முடைய நாட்டிலே அர்த்தநாரீஸ்வர தத்வம் என்பது இருக்கு  திருச்செங்கோட்டிலே. அதனாலே ரொம்பவும் முக்யமான கௌரவத்தை கொடுத்திருக்கா, கொடுத்துண்டு இருக்கா. அதிலே ஒண்ணும் குறைச்சலே கிடையாது. எல்லாரையும் கௌரவப்படுத்தக்கூடிய தேசம். நவராத்திரியை கொண்டாடும் தேசம் நம்முடைய தேசம். இப்படிப்பட்ட இந்த தேசத்திலே எல்லார்க்கும் நன்மை வருவதற்கு, நம்ப Chief Justice பேசும்போது சொன்னார் freedom பத்தியும் சொல்லிண்டே வந்தார், responsibilities பத்தியும் சொல்லிண்டு வந்தார். ஒவ்வொரு தரம் சொல்லும்பொழுதும் அந்த ரெண்டாவது வார்த்தையையும் சேர்த்து சேர்த்து சொல்லிண்டு வந்தார். அந்த responsibilities ஐ அந்த பொது ஜனங்கள் உணரணும். நீதான் ராஜானு கொடுத்தாச்சு. அந்த ராஜா என்பது ஜராவாக ஆகிடக்கூடாது. முதுமையாக ஆகிடக்கூடாது. அது மாதிரியாக எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சொல்லியாச்சு. ஆனால் மன்னர்கள் என்று இருக்கும்போது அதுக்குண்டான background ம் இருக்கணும். அதற்கு கல்வியைக் கொடுக்கணும். அந்த கல்வியைக் கொடுப்பதற்காகதான் இந்த மஹாஸ்வாமி வித்யா பீடம் என்பது. அப்படிப்பட்ட அந்த responsibilities ஐ ஜனங்களுக்கு நாம உணர்த்தரதுக்கு, revenue வேணும், respect உம் வேணும், நமக்கு அந்த rights உம் கொடுத்திருக்கா. அந்த right thinking உம் வேணும். அந்த right thinking , சரியான சிந்தனை வரதுக்காக, கலாசாரத்துடன் சேர்ந்த கல்வி, கடவுள் பக்தியுடன் கூடிய கல்வி, நமக்கு கடமையை போதிக்கக்கூடிய கல்வி. அந்த மாதிரி பகவத் கீதையை அடிப்படையாக கொண்ட கல்விமுறை வரதுக்காக இந்த சென்னையிலே நல்ல முறையிலே சேவையை செஞ்சுண்டு இருக்கார். தொடர்ந்து சங்கர் இந்த மாதிரி பெரியவாளோட அனுக்ரஹத்தோட, குறிப்பிட்டு புதுப்பெரியவாளுக்காக பண்ணி இருக்கக்கூடிய அவர் புதுப்பெரியவாளுக்காக நிறைய பண்ணி இருக்கார், அவாளுடைய ப்ரியமான பாத்ரம், அபிமானமான பாத்ரம் அவர். தொடர்ந்து இந்த அழகான institution மேன்மேலும் வளர்ந்து அனைவருக்கும் வாழ்க்கையில் வெற்றி கிடைப்பதற்கு, அந்த ஜயப்ராப்தி கிடைப்பதற்கு நம்முடைய புதுப்பெரியவாளையும், இது போன்ற தர்மங்கள் வளர்வதற்கு ‘வந்தே குரு பரம்பராம்’ என்கிற குருபரம்பரையையும், காமாக்ஷி அம்பாளையும் ப்ரார்த்திப்போம்.


ஹர ஹர ஶங்கர! ஜய ஜய ஶங்கர!!



75 views0 comments

Recent Posts

See All

Comentarios


bottom of page