
500 ஆண்டு கால காத்திருப்புக்கு பின்னும் 50 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பின்னும், தம் குரு, பரமகுரு உட்பட காஞ்சி ஆச்சாரயாள் மூவரும் கண்ட கனவே போல், இன்று கன கம்பீரமாக எழுந்துள்ள பால ராமர் கோயில் பூமி பூஜையிலும் மூலராமர் ப்ராணப்ரதிஷ்டை அனுஷ்டானங்களிலும் தலைமை பொறுப்பு நமது பூஜ்யஶ்ரீ பெரியவாளுக்கு கிடைத்தது தெய்வ சங்கல்ப்பமே. அது மட்டுமல்ல, இவர்களது குரு பரமகுரு இருவரும் தொடங்கி வைத்த தேச சரித்திரத்தில் இடம் பெறும் ஶ்ரீ ராம மந்திர் எனும் மிகப் பெரிய ஆன்மிகப்பணியினை அவர்களுக்கு அடுத்து பட்டத்தில் உள்ள சங்கராச்சாரியர் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு பூர்த்தி செய்திட வேண்டும் என்பது பூர்வாச்சார்யார்களின் ஆசியுமாகும் என்பது நிதர்சனம்.
அது போலவே 16-2-25 அன்று நடைபெறும் அகிலாண்டேஸ்வரி அம்பாள் தாடங்க ப்ரதிஷ்டையும், அம்பாளின் சங்கல்பத்தோடு நூறாண்டு காலம் நம்மிடையே “நடமாடும் தெய்வமென” வாழ்ந்து சரித்திரம் படைத்திட்ட நமது பூஜ்யஶ்ரீ மஹாபெரியவா அவர்களால் மேற்கொள்ளப்பட்ட 1923 ஆம் ஆண்டு தாடங்கப் பிரதிஷ்டை நிகழ்ந்து சரியாக 100 ஆண்டுகள் கடந்ததை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது, சில நேரங்களில் சில பணிகள் காரணங்கள் ஏதுமின்றி சவால் நிறைந்ததாக அமைந்து விடுவது உண்டு. எனினும் எந்த சூழ்நிலையிலும் எடுத்துக் கொண்ட பணிகளை செவ்வனே முடிக்கும் சக்தி சாமர்த்தியமும் பொறுமையும் நமது ஶ்ரீ பெரியவாளுக்கு நிறையவே உண்டு. தாடங்கப்ரதிஷ்டை எனும் மகத்தான புனிதப் பணியினை சிரமேல் கொண்டு செய்து முடித்திட சங்கல்பித்ததாலோ என்னவோ, ப்ரதிஷ்டைக்கு பூர்வாங்க க்ரமங்களில் 13-2-25 அன்று மாலை, அம்பாள் சந்நிதியில் “கட்கமாலா” ஜபித்து அபிமந்திரிக்கப் பட்ட கலச ஜலத்தில் “கலாகர்ஷணம்” ஸ்தாபித்து, கலசத்தை பண்டிதர் தாங்கிவர அருகே வெள்ளித் தாம்பாளத்தில் இரு தாடங்கங்களையும் ஸ்தாபித்து ஶ்ரீ ஆச்சாரயாள் தம் சிரசுமேல் தாங்கி உள் ப்ராகாரத்தை வலம் வந்து கலசம் தாடங்கம் முதலியவைகளை மண்டபத்தில் ஸ்தாபித்தார்கள். மேற்கொண்டு ஜப ஹோமங்கள் தொடர ஆணையிட்டார்கள்.
Sri Devi Khadgamala Stotram
Comments