“குருதி தன்னிலே கண்ட இன்சுவை யகலச் செய்வன் கரும்பன்ன மேனியன் ரசபுரீச வெண்ணியூரனே”
என்று பாம்பாட்டி சித்தரால் பாடப்பெற்ற கோவில்வெண்ணி அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் ஆலயத்துக்கு கடந்த 10-2-2025 அன்று குடமுழுக்கு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.


கோவில் நகரமான கும்பகோணத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் ஆலங்குடிக்கு அருகில் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ள இவ்வாலயத்து ஈசன் நீரிழிவு நோய்க்கு மருந்தாக விளங்குகிறான். இதன் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இவ்வாலயத்தில் , தில்லியிலிருந்து வந்திருந்த திரு E.N.மூர்த்தி மற்றும் அவர்களது துணைவியார் திருமதி சித்ரா மூர்த்தி தலைமையில்,சென்னை, தஞ்சை மற்றும் குடந்தையிலிருந்து வந்திருந்த திருப்புகழ் அன்பர்கள் திருப்புகழ் இசை வழிபாடு செய்தனர்.
சென்னை திருமதி ரேவதி ஜானகிராமன் தலைமையில் திருமுறை இசை வழிபாடும் நடைபெற்றது.
Comments