மணிக்குடி ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம்
- Thanjavur Paramapara
- Feb 27, 2021
- 1 min read
மணிக்குடி ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த (1000 வருடம்) மிகவும் அபூர்வமான சில சிவாலயங்களில் மட்டும் உள்ளது மாதிரி இங்கும் வாவ்வால் மண்டபம் உள்ளது . இந்த மண்டபம் சுண்ணாம்பு, சிறிய செங்கற்கள் , கடுக்காய், வெல்லம் கொண்டு வலைவுகளாக உஷ்ணத்தை கிரஹிக்க கூடியதாக 20 அடி உயரமாக , காற்று, வெளிச்சம் நன்கு மண்டபத்துக்கு வருமாறு கட்டப் பட்டுள்ளது.
இங்கு உள்ள வவ்வால் மண்டபத்தில் 12 இறக்கைகள் உள்ளன அந்த 12 இறக்கைகளிலும் தொன்றுதொட்டே இந்த கோவிலின் வரலாற்றை அழகிய அழியாத சிவப்பு வர்ண சித்திரங்களாக வரைந்திருந்தார்கள்.
நடந்த 2019 கும்பாபிஷேகத்தில் இதை பல கலர் சித்திரங்களாக வரைந்துள்ள வரலாற்றை டிரஷ்டி மணிக்குடி ஶ்ரீமதி பத்மா சீனிவாசன் உபயத்தில் பேனராக கோவிலில் பொது மக்கள் தரிசனம்திற்கு வருபவர்கள் பார்வைக்காக நாளை வைக்கப்பட உள்ளது
வாழ்க வளமுடன்

Courtesy:Sri Kalyanraman
Σχόλια