top of page

NAVARATHRI CELEBRATIONS AT KARUVILI TEMPLE

இயற்கை எழில் நிறைந்த, கருவிலி என்ற சிற்றூரில் அமைந்துள்ள சர்வாங்கசுந்தரி உடனாய ஸ்ரீ சற்குணேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் நவராத்திரி உத்சவம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடந்தையிலிருந்து திரளாக வரும் பக்தர்களும், உள்ளூர் மக்களும் மிகுந்த பக்தியுடனும், ஆர்வத்துடனும் பங்கேற்கின்றனர். ஒன்பது நாட்களும் தேவிக்கு ஒன்பது விதமான அலங்காரங்கள் அழகாக செய்யப்பட்டு லலிதா சஹஸ்ரநாம லக்ஷார்ச்சனை விஜயதசமி(12-10-2024) அன்று நடைபெற்றது. தேவி அம்பு எய்தும் வைபவத்துடன் நவராத்திரி உத்சவம் இனிதே நிறைவு பெற்றது.




Comments


bottom of page