“அயோத்தியில் ஶ்ரீராம மந்த்ர யந்த்ரம் பிரதிஷ்டை.”
“सेव्यं श्रीराममन्त्रं श्रवणशुभकरं श्रेष्ठसुज्ञानमन्त्रं स्तव्यं श्रीराममन्त्रं नरकदुरितदुर्वारनिर्घातमन्त्रम्।
भव्यं श्रीरममन्त्रं भजतु भजतु संसारनिस्तारमन्त्रं दिव्यं श्रीरममन्त्रं दिवि भुवि विलसन्मोक्षरक्षैकमन्त्रम् ॥
श्रीरामकर्णामृतम्
500 ஆண்டுகளுக்கு மேலாக பல தலைமுறை பக்தர்கள், மகான்கள், காஞ்சி திரிவேணி எனும் ஶ்ரீகாமகோடி பீடாதிபதிகள் பரம பூஜனீயர்களான மஹாபெரியவா, புதுப் பெரியவா ஶ்ரீபாலபெரியவா ஆகியோரின் அரும் தவத்துடன் கூடிய பெரு முயற்சியாலும் கடந்த 22-1-24 அன்று ஶ்ரீ பாலராமர் கோவில் ப்ராணப்ரதிஷ்டை செய்யப்பட்டு நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்களால் ஶ்ரீ பாலராமர் தர்சிக்கப்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இக் கோவில் ப்ராணப்ரதிஷ்டையின் போதும் அதற்கு முன்பும் பின்பும் தற்போது பீடத்தில் ப்ரகாசித்து கொண்டுருக்கின்ற பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் பெருமைக்குரிய பங்களிப்பு பற்றியும் நாம் அறிந்ததே. ப்ராணப்ரதிஷ்டையினைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் உபநிஷத் ப்ரும்மேந்திராள் மடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, காலத்தால் மிகப் பழைமையான மேரு வடிவத்தில், பீஜாக்ஷரங்களுடன் கூடிய, கருங்கல்லாலான, ஶ்ரீராமமந்த்ர யந்த்ரம் உள்ளது. ஶ்ரீ த்யாகப்ரம்மம் இந்த யந்த்ரத்தினை தர்சித்துள்ளார்கள். மேற்படி யந்த்ரத்திற்கு எதிரில் ஶ்ரீ ஆஞ்சனேய ஸ்வாமி கைகட்டி வாய்பொத்தி யந்திரத்தை குனிந்து பவ்யமாக படிக்கும் பாணியில் இருக்கிறார். இந்த யந்த்ரத்தை ஶ்ரீ பெரிவாளின் பெரு முயற்சியின் பேரில் அதில் உள்ள மந்த்ர பூர்வமான பீஜாக்ஷரங்களையும் க்ரந்த லிபியில் உள்ள அக்ஷரங்களையும் பரிஸ்ரமப்பட்டு படித்து புரிந்து கொண்டு பிரதி எடுத்து எடுத்த பிரதியை உரிய அறிஞர்களைக் கொண்டு சோதித்து உறுதி செய்துகொண்டு அதனை வடஇந்திய பக்தர்கள் புரிந்தகொள்ள ஏதுவாக தேவநாகரி (சம்ஸ்கிருதம்) எழுத்தில் பஞ்சலோகத்தில் மேரு வடிவத்திலேயே மூர்த்தியாக வடிக்கச் செய்தார்கள். இந்த பஞ்சலோக மேருவை முறையாக பூஜித்து ஹைதராபாத் முதலிய ஷேத்திரங்களில் வலம் வரச்செய்துள்ளார்கள். இந்த மேரு தற்சமயம், ஶ்ரீசீதாதேவி அவதாரஸ்தலமான நேபாள் தேசத்தில் ஜனக்புரியில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த பஞ்சலோக மேரு க்ஷேத்திரவல முடிவில் அயோத்தி ஶ்ரீ பாலராமர் கோவிலில் ப்ரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து, ஶ்ரீ பெரியவர்கள் மேரு உருவத்தில் உள்ள ஶ்ரீராம மந்த்ர யந்த்ரத்தினை மிகப் பெரும் பொருட் செலவில் பிரஸ்தாபிக்கப்பட்ட, தாராளமான நீள அகலம் கொண்ட சொர்ணத் தகட்டில் சம்ஸ்க்ருத லிபியில் யந்த்ரமாகப் பதிவு செய்துள்ளார்கள். மிகப்பெரிய இந்த சொர்ண தகடு யந்த்ர வேலைகள் யாவும் குரோதி சம்வத்சரம் விருச்சிக சுக்ல பானு சப்தமி, சதய நட்சத்திரம் வஜ்ரநாம யோகம், பாத்ர கரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் பாரதம் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் புகழுடனும் இருக்கவேண்டி சங்கல்பித்து சுக்ல நவமி திதி அன்று 9-12-24 ஶ்ரீ பெரியவாளின் திருப்பதி முகாம் ஶ்ரீபாதுகா மண்டபத்தில் ஶ்ரீ ஆச்சார்யாள் அவர்களால் பூஜிக்கப்பட்டு அயோத்திக்கு பிரதிஷ்டை செய்வதற்காக அனுப்பப் பட்டது.
सबिन्दुनादान्तकलान्ततुर्य मूर्तिं भजेऽहं रघुवंशरत्नम् ॥
Comments