செவ்வாய்க்கிழமை அன்று நமது ஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஶ்ரீ ஶங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் 57வது ஜயந்தி.











வேத சாஸ்த்ர பாரம்பரியமான தர்மத்தைக் காப்பதற்காகவே ஶ்ரீ பகவத்பாதர்கள் இந்த ஆசார்ய பீடத்தை ஸ்தாபித்தார். இதன் 70வது ஆசார்யராகிய இன்றைய ஶ்ரீ பெரியவர்கள் ஓயாத உழைப்பினால் இந்த லோகானுக்ரஹத்தை செய்துவருகிறார்கள். அவரது ஜயந்தி நன்னாளில் அவருக்கு நம் வந்தனத்தைச் செலுத்துவோம். அவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்கும் பொருட்டும், லோகக்ஷேமத்திற்கு அவர் ஸங்கல்பித்த தர்மகாரியங்கள் தடையின்றி ஸித்திக்கும் பொருட்டும் நம் ப்ரார்த்தனைகளை செய்வோம். நாமும் ஶ்ரேயஸ்ஸை அடைவோமாக!
பல லிபிகளில் லகு பூஜா பத்ததி:
留言