ஸ்ரீ குருப்யோ நம:
ஏகாம்பரநாதர் மற்றும் காமாட்சி அம்மன் பிரம்மோஸ்வத்தின் போது மண்டகபடியானது, 1959ல் மஹா பெரியவாள் உத்தரவின் படி அதாவது சூரியன் சந்திரன் உள்ள பரியந்தம் இந்த கைங்கர்யம் நடக்க வேண்டும் என்று கூறி காக்கவாக்கம் ஸ்ரீ நாராயண ஐயர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினரால் இன்று வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 1990ம் ஆண்டு முதல் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோஸ்சவத்தின் போது ரிக்வேத பாராயணமும் அம்பாளுக்கு மண்டகபடி உற்சவமும் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்களுடைய குடும்பம் ஸ்ரீ காஞ்சி காகோடி பீடத்திற்கு தொடர்ந்து கைங்கர்யம் செய்வது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு வருடமும் தீபாவளி திருநாளன்று அம்பாள் இந்த காக்கவாக்க சத்திரத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள் மற்றும் ஸ்ரீஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள் காஞ்சிபுரத்தில் இருந்த சமயம் தீபாவளி அன்று காக்கவாக்க சத்திரத்தில் காமாக்ஷி அம்பாள் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். நாளை (31-10-2024) அன்று அம்பாள் இந்த காக்கவாக்க சத்திரத்திற்கு எழுந்தருள இருப்பதால் பக்தர்கள் திரளாக வந்திருந்து ஜகன்மாதா ஸ்ரீ காமாட்சி அம்பாள் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு :
காக்கவாக்கம் ஸ்ரீ மல்லி மாமா – 9944597157
காக்கவாக்கம் ஸ்ரீ அசோக் - 9677333331
காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதி நெ.13 - காக்கவாக்க சத்திரம்
மேற்படி காக்கவாக்கம் ஶ்ரீ நாராயண அய்யர் குடும்பத்தினர், ஶ்ரீ மஹாபெரியவா ஆக்ஞைப்படி செயதிடும் இக்கைங்கர்யம் மகத்தானது. ஶ்ரீ காமாட்சியை குலதெய்வமாக, இஷ்ட தெய்வமாக கொண்ட குடும்பங்கள் தீபாவளித் திருநாளில் அம்பாளை தரிசித்திட வாய்ப்பு.
Comentários