23 May 2024
कामारिकामां कमलासनस्थां काम्यप्रदां कङ्कणभूषहस्तां । काञ्चीनिवासां कनकप्रभासां कामाक्षिदेवीं कलयामि चित्ते ॥
காமாரிகாமாம் கமலாஸனஸ்தாம் காம்யப்ரதாம் கங்கணபூஷஹஸ்தாம்| காஞ்சிநிவாஸாம் கனகப்ரபாஸாம் காமாக்ஷிதேவீம் கலயாமி சித்தே ||
காமாரிகாமாம் - மன்மதனால் பூஜை செய்யப்பட்டவள்.
கமலாஸனஸ்தாம் - பத்மாஸனத்தில் வீற்றிருப்பவள். அது மாத்ரம் அல்ல, அம்பாளுடைய பாதத்திலேயே பத்ம சின்னம் இருக்கு. 'ஸரோஜ வத்ஸாயிகித சக்ர ஜீவிதே' அது போன்ற அம்பாளுடைய பாதத்திலேயே பத்ம ரேகா என்பது இருக்கிறது.
காம்யப்ரதாம் - காமாக்ஷி ன்னு அம்பாளுக்கு என்ன பேரு இருக்கோ அதுக்கு அர்த்தம் என்னன்னா லலிதோபாக்யானத்துல 'காமாக்ஷிஹி த்ரயோவர்ணாஹா ஸர்வமங்கள ஹேதவ:' என்பதாக 'கா' 'மா' 'க்ஷி' என்கிற இந்த மூன்று எழுத்துக்கள் ஸர்வ மங்களங்களையும் கொடுக்கின்றன. 'ஸர்வமங்கள மாங்கல்யே ஶிவே ஸர்வார்த்த ஸாதிகே ஶரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே' என்று நாம் எதை சொல்லி வருகிறோமோ அதனுடைய பாவார்த்தமாக (bhava) விளங்குபவள் காமாக்ஷி. 'காமாக்ஷிஹி த்ரயோவர்ணாஹா ஸர்வமங்கள ஹேதவ:' 'காமாரிகாமாம் கமலாஸனஸ்தாம் காம்யப்ரதாம்' 'காமாக்ஷி காமதாயினி' 'ஸுதாஸாஹர மத்யஸ்தாம் காமாக்ஷி காமதாயினி' 'ஓட்யாணபீட நிலயாம் பிந்து மண்டல வாஸிநீ'
ஸுதாஸாஹர மத்யஸ்தா - ஸாஹரம் - பலவிதமான கடல்கள் இருக்கின்றன. உப்பு கடல், பாற்கடல் இப்படி பல கடல்கள் இருக்கின்றன. அமிர்தம் என்பது சிறிய பிந்து கிடைத்தாலும் அது மிக உயர்ந்தது. அந்த அமிர்தமே ஒரு கடலாக இருந்தால், கடலளவுக்கு இருந்தால் எப்படி இருக்கும்? அமிர்தம் என்பது சிறிய துளி கிடைத்தாலும் அது உயர்ந்த விஷயம். முழுக்க முழுக்க அமிர்தமயமான கடல். அதற்கு நடுவிலே இருக்காளாம் அம்பாள். ஸுதாஸாஹர மத்யஸ்தா காமாக்ஷி. அப்படிப்பட்ட காமாக்ஷி, காமதாயினி - பக்தர்களுடைய கோரிக்கையை அதாவது நியாயமான, தர்மமான, ஸாத்வீகமான நல்ல கோரிக்கைகள் எல்லாவற்றையும் அந்த அம்பாள் பூர்த்தி செய்து தருகிறாள்.
கங்கணபூஷஹஸ்தாம் - கங்கண பூஷணம். அதாவது அலங்காரம் பலவிதமாக இருக்கிறது. அதிலே த்ருட ஸங்கல்பம், ஸத்ய ஸங்கல்பம், ஸாத்வீகமான ஸங்கல்பம், ஆத்ம குணத்துடன் கூடிய ஸங்கல்பம். அந்த ஸங்கல்பத்திற்காக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாள். அந்த கங்கணம் என்பது த்ருட ஸங்கல்பத்தைக் குறிப்பது. நல்ல ஸங்கல்பத்தைக் குறிப்பது. நல்ல நமக்குள்ளே பிடிப்பைக் குறிப்பது. இறைவனிடத்திலே நமக்கு ஒரு பிடிப்பு இருந்தால் பீடிப்பில்லாத வாழ்க்கை நமக்கு அமையும். அப்படி அந்த 'கங்கண பூஷ ஹஸ்தாம்' கங்கணம் என்பது அலங்காரமாக, ஆபூஷணமாக, நகையாக இருப்பது. ஆகவே கையிலே அம்பாளுக்கு கங்கணம் இருக்காம். அந்த கங்கணம் என்னன்னா 'உமாலிங்கன ஸங்க்ராந்த குசல கங்கண முத்ரிதம் லிங்கம் ஏகாம்ப்ர நாதஸ்ய ஸைகதம் ஸமுபாஸ்மஹே' என்பதாக அந்த உமாலிங்கன மூர்த்தி என்று சொல்கிறார்கள் அந்த உமையாக அந்த காமாக்ஷி அம்பாள் கங்கணத்துடன் விளங்கி வருகிறாள்.
காஞ்சிநிவாஸாம் - காஞ்சிநிவாஸாம்ல ரெண்டு அர்த்தம் சொல்றா. காஞ்சி க்ஷேத்ரத்துல வசிப்பவள் என்று ஒரு அர்த்தம். அது அம்பாள் வந்து ஒவ்வொரு இடத்துல சக்தி பீடத்துல ஒவ்வொரு ஸால விசேஷமாக விளங்கி வருகிறாள். அந்த அம்பத்தோரு சக்தி பீடத்துல யோனி பீடமாக காமாக்யாவில் இருக்கிறாள். காசி ப்ரயாகைக்கு மத்திலே லிங்கவாஸினில இருக்கா, அம்பானில இருக்கா. இன்றைக்கு பக்கத்து தேசமாக இருக்கக்கூடிய சிந்து நதிக்கரையிலேயும் சில க்ஷேத்ரத்துல அம்பாள் இருந்துண்டு இருக்கா, சக்தி பீட ஸ்வரூபிணியாக இருக்கா. அதே மாதிரி பத்மா என்பதாக அந்த கங்கையினுடைய இன்னொரு பெயர். அந்த நதிக்கரையில டாகேஶ்வரியாக இன்னும் பல அம்பாள் அங்கே இருந்துண்டு இருக்கா. அங்கே ஒவ்வொரு திவ்ய அவயவங்கள் அங்கங்கே இந்த பாரத தேசத்திலே ப்ராசீனமான பாரதத்திலே அரங்கமான ஒரு காலத்துல இருந்து அங்கங்கே இருக்கு. அப்படி பார்க்கும்பொழுது காஞ்சி அவயம் அதாவது காஞ்சிங்கறது ஓட்யாணத்துக்கான ஒரு பேரு காஞ்சி. அதான் இந்த ஊருக்கும் காஞ்சின்னு பேரு வந்திருக்கு. 'காஞ்சிநிவாஸா' அந்த எல்லா இடத்துலயும் இருக்கக்கூடிய அம்பாள் இங்கே 'ஒட்யாணபீட நிலயா' என்பதாக காஞ்சி என்கிற அந்த ஒட்யாணத்தைக் குறிக்கக்கூடிய அதிலே விசேஷமான அனுக்ரஹம் பண்றா. காஞ்சிநிவாஸாம் - காஞ்சி க்ஷேத்ர நிவாஸாம்.
கனகப்ரபாஸாம் - கனகம் என்பது ஶுத்தத்தைக் குறிக்கக்கூடியது. உயர்ந்த தேஜஸைக் குறிக்கக்கூடியது கனகம். தேஜஸ் என்பதிலே உயர்ந்த தேஜஸ்ஸு என்பது அந்த கனகம். 'நமோ ஹிரண்யவாவஹே' அப்படின்னு சொல்றோம். 'ஹிரண்யரூபாய ஹிரண்யபதயே' அப்படின்னு சொல்லி 'ஆப்ரணஹா ஸர்வ ஏவ ஸுவர்ண:' அந்த ஸ்வாமி வந்து முழுக்க முழுக்க தங்கமயமாக இருக்கார் 'கனகமயசேவா' அப்படின்னு ராமரைப்பத்தி கனகம் அப்படின்னு எல்லாம் பாடறா. அந்த மாதிரி அந்த ஸுவர்ணமயமாக இருக்கக்கூடிய அதிலே கனகப்ரபாஸாம். அப்படிப்பட்ட ஒரு ப்ரகாஸத்துடன் தங்கம் அப்படீங்கறது எப்படி ஒரு விகாஸத்திற்கு, வளர்ச்சிக்கு அறிகுறியோ, ஶத்தத்திற்கு அறிகுறியோ, ஶாஶ்வதமான சுகத்திற்கு அறிகுறியோ, மூலதனத்திற்கு அறிகுறியோ அது போல 'ஆம்ரதரு மூலவஸதே:' அது மூலமாக ஆம்ரதரு - மாமரத்தடிலே இருக்கார். இது மூலதனமாக இருக்கார். 'பினாகி மூலதனம்' மூலதனம் என்கிற வார்த்தையைச் சொல்றார் மூக பஞ்சஶதில அந்த பரமேஶ்வரனுடைய மூலதனம் காமாக்ஷி.
காமாக்ஷி தேவீம் கலயாமி சித்தே - கலயாமினா (கலசஞ்சாணே) விதம் விதமாக த்யானம் பண்ண முடியும். பலஸ்வரூபத்துல த்யானம் பண்ண முடியும். நின்ன மாதிரி த்யானம் பண்ணலாம், ஒத்தக்கால்ல தபஸ் பண்ற மாதிரி த்யானம் பண்ணலாம், பிலாகாஶ ஸ்வரூபத்துல த்யானம் பண்ணலாம் 'ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதா' அப்படியாக த்யானம் பண்ணலாம், ஸ்வர்ண ஸ்வரூபத்துல த்யானம் பண்ணலாம். மூலஸ்தான ஸ்வருபத்துல த்யானம் பண்ணலாம். இப்படி பலவிதமாக காமாக்ஷி தேவி கலயாமி சித்தே. மனஸ்ஸுல நான் த்யானம் பண்ணிக்கறேன்னு சொல்றார். அப்படிப்பட்ட அம்பாள் 'ஜய ஜய ஜகதம்ப ஶிவே' - லோகத்திற்கு தாயாக விளங்குகிறாள். 'ஜய ஜய காமாக்ஷி ஜய ஜயாத்ரி ஸுதே' முதல்ல தாயாக இருக்கா, அப்பறம் பொண்ணாக இருக்கா. பொண்ணாக இருக்கானா 'அத்ரி ஸுதே' அதாவது பர்வதராஜ குமாரி. பஞ்ஜய க்ருபயா மமதுரிதானி. அப்படி அம்பாள் வந்து அத்ரி ஸுதாவா இருக்கா. 'ஜய ஜய மஹேஶதயிதே' அர்த்தாங்கியாக அங்க அந்த ஏகாம்ப்ரேஶ்வரருக்கு இந்த பககத்துல காமாக்ஷி அம்பாள் ஸமேத ஏகாம்ப்ரேஶ்வரர் அப்படி இருக்கா. 'ஜய ஜய சித்ககந கௌமுதீதாரே' சித்ககநம் - அந்த அபிராமி அந்தாதி சொல்லும்பொழுது அந்த ஆகாசத்துல அந்த வளையல மேல அப்படி தூக்கி அனுப்பிச்ச உடனே அது வந்து ப்ரகாசமாக, பௌர்ணமியாக தெரிஞ்சது என்கிறா. இந்த சித்ககனம் - சைதன்யம். சைதன்யம் என்பது எந்தெந்த மனுஷாளுக்கு எந்தெந்த மாதிரியான நல்ல உணர்வுகள் இருக்கணுமோ, எந்த பக்தி இருக்கணுமோ, எந்த விதமான அனுபூதி இருக்கணுமோ அப்படிப்பட்ட நல்ல எண்ணங்கள் அந்த சைதன்யம், அந்த உயிரோட்டம், நீரோட்டம். 'ஜய ஜய சித்ககந கௌமுதீதாரே' அப்படிப்பட்ட கௌமுதி - சந்த்ரகாந்தம் அதனுடைய தாரை தொடர்ந்து வந்துண்டே இருக்கு.
அதாவது மனஸ்ஸுக்கு இதமான ஒரு சைதன்யம், ஒரு சிந்தனை, ஒரு சக்தி, ஒரு அபிப்ராயம் வந்துண்டே இருக்கு. அப்படி எப்படி இந்த ஊத்துல இருந்து தண்ணீர் வருகிறதோ அது போன்று அம்பாளை நாம த்யானம் பண்ணும்பொழுது அந்த சைதன்ய தாரை என்பது வந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த அம்பாள் எல்லார்க்கும் அனுக்ரஹம் பண்ணிண்டு இருக்கா.
தசரத ராஜாலேந்து ஆரம்பிச்சு இங்க சுத்தி இருக்கற சிற்பங்கள் எல்லாம் இந்த வஸந்த மண்டபத்திலே இருக்கு. அவர் ப்ரார்த்தனை பண்றது, அந்த கௌஸல்யா, சுமித்ரா, கைகேயி அவா மூணு பேருடையது இருக்கு. அவா குழந்தைகளை அந்த கர்ப்பவதியாக அந்தர்ஹோத்ரியாக அவா இருக்கக்கூடிய சிற்பங்கள் இருக்கு. ராமாயண சிற்பங்கள் எல்லாம் இருக்கு. ராமாயண சிற்பங்கள் அந்த ராவணாசுரன் அப்பறம் அந்த ஆஞ்ஜனேயர் வாலை எல்லாம் சுத்தி சுத்தி உயரமா ஒரு ஆசனத்துல உட்கார்ந்திருக்கற மாதிரி அந்த சிற்பம் இங்கே (காமாக்ஷி கோவில் வஸந்த மண்டபத்தில்) இருக்கு. இப்படி இந்த ராமாயணத்தை முன்னாடியே இங்கே சிற்ப வடிவத்துல வெச்சு, அஷ்டதிக்பாலகர்கள், இன்னும் நிறைய சின்ன சின்ன சிற்பங்கள் எல்லாம் இங்கே இருக்கு. இப்படி அந்த ஆசார்யாளுடைய சிற்பம் இருக்கு இந்த மண்டபத்தில. அப்படி இந்த ஒசத்தியான இந்த வஸந்த மண்டபத்திலே வஸந்த ருதுவில இந்த உத்ஸவத்தை அதாவது மினி ப்ரம்மோத்ஸவம்னு சொல்லலாம். அந்த மாதிரி இந்த மாசி மாசம் நடத்தற ப்ரம்மோத்ஸவத்துக்கு ஒரு தோற்றுவாய் அப்படின்னு சொல்றாளே அதாவது ஒரு ஸ்வரூபமாக இருக்கற அளவுக்கு இந்த உத்ஸவத்தை இந்த வருஷம், வருஷா வருஷம் நடத்தறதுனாலும், இந்த வருஷத்துல ஒரு சேர இந்த ஏற்பாடுகள் எல்லாம் பண்ணி நல்ல விசேஷமாக நடத்தி இருக்கா. நம்ப கோவில்கள் எல்லாம் மேன்மேலும் வளறணும். இந்த கோவில்கள்தான் நம்முடைய ஸனாதன வைதீக இந்து தர்மத்திற்கு ஒருங்கிணைக்கும் கேந்த்ரங்கள். மக்களை ஏழைகள், பணக்காரர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், சௌர்யமானவர்கள், சௌர்யம் இல்லாதவர்கள், கோரிக்கையோடு இருப்பவர்கள், கோரிக்கை அற்றவர்கள் எல்லாருக்கும், ஆக முனிவர்களாக இருந்தாலும் அவர்களும் தேடக்கூடிய பாதம் இந்த அம்பாளுடைய பாதம். அதுதான் துர்வாஸரும்சரி, ஆசார்யாளும்சரி எல்லாரும் இங்கே வந்து விசேஷமா அம்பாளை த்யானம் பண்ணி பூஜை பண்ணி இருக்கக்கூடிய
'ஞானினாமபி சேதாம்ஸி தேவி பகவதி ஹி ஸா।
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி॥
அந்த மாதிரி ஞானிகள்ளேருந்து ஆரம்பிச்சு எல்லாருக்கும் ஒரு ப்ரேம ஆஸ்ம்ரமாக, ஒரு ஶ்ரத்தையினுடைய இடமாக, பக்தியினுடைய இடமாக இருப்பது இந்த அம்பாளுடைய உபாஸனை. அப்படிப்பட்ட இந்த அம்பாள் யுகம் யுகமாக இங்கே பக்தர்களுக்கு அனுக்ரஹம் பண்ணிண்டு இருக்கா. அப்படிப்பட்ட அம்பாளுடைய உத்ஸவத்தை நாலு கோபுரம் அமைந்திருக்கக்கூடிய க்ஷேத்ரம். அதுக்காக பெரியவா அந்த காலத்திலே நாலு கோபுரங்கள் அமைந்திருக்கக்கூடிய சில கோவில் விருத்தாசலம், வேதாரண்யம், விளம்பல், திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம் இந்த மாதிரி ஊர்களிலே எல்லாம் ஜடாபாராயணம் பண்ண சொல்லி அந்த முத்துஸ்வாமி ஐயர் முலமாக இங்கே ஜடாபாராயணங்கள் எல்லாம் நடந்து அப்படி இந்த நாலு பக்கமும் கோபுரங்களோடு நிறைய கோபுரங்கள். ரிஷி கோபுரம் இருக்கு, ஸ்வர்ண கோபுரம் இருக்கு. இப்படி இந்த கோபுர தரிசனம் கோடி புண்யம்னு சொல்வா. பல கோபுரங்களை தரிசிக்கக்கூடிய புண்ய க்ஷேத்ரமாக 'ஸ்ரீ சக்ரம் பகவத்பாதாள். அவாளே ப்ரதிஷ்டை பண்ணி ஸ்ரீ சக்ர பூஜனம். இப்படி இந்த விசேஷமான க்ஷேத்ரத்துல இந்த மாதிரி உத்ஸவங்கள் செய்வது மேன்மேலும் ஒரு வளர்ச்சியைக் காண்பிக்கறது. தளர்ச்சியை நீக்குவதற்கு வளர்ச்சி என்பது தேவை. அந்த தளர்ச்சியை நாம ஆன்மீகத்துல ஏற்படாதபடி பாத்துக்கணும். எல்லா கோவிலும் பொலிவுடன் விளங்க வேண்டும். அந்த பொலிவுடன் இருப்பதற்கு எல்லா கோவில்கள்ளேயும் தூப தீப நைவேத்யங்கள் விசேஷமாக நடைபெற வேண்டும். தினசரி பூஜை நடக்கணும். இருக்கற கோவில் எல்லாத்தையும் முழுமையாக நாம் பராமரிக்கணும். பலவிதத்திலேயும் நாம் பராமரிக்கணும். அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரம், நைவேத்யம், தீபாராதனை, மர்ய்ர புஷ்பம். வேதோக்த புஷ்பங்களா இருக்கணும். வேதோக்த புஷ்பங்கள். அலங்காரத்துலயானும் நாங்க பலதை உபயோகப்படுத்தினாலும், பூஜைகளுக்காக நாம உபயோகப்படுத்தர புஷ்பங்கள் வேதோக்தமான புஷ்பங்களா இருக்கணும். வேத ஸம்பந்தமான புஷ்பங்களாக, ஆகம ஸம்பந்தமான புஷ்பங்களாக, ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் நல்ல புஷ்பங்களை உபயோகப்படுத்தணும். வேதோக்த மந்த்ரம் - வேதத்துல இருக்கக்கூடிய மந்த்ரங்கள் மூலமாக வேதோக்த மந்த்ரம், வேதோக்த மந்த்ர புஷ்பம். அந்த மந்த்ரத்தையும், புஷ்பத்தையும் சேர்த்து அந்த மந்த்ரங்களைச் சொல்லி அந்த புஷ்பங்களை சமர்ப்பிக்கணும். இது ஒன்று. ரெண்டாவது அந்த மந்த்ரங்கள் என்பது வேதோக்தமான அதாவது வேதத்துல என்ன சொல்லி இருக்கோ முதாக்தம், அனுதாக்தம், ஸ்வரிதம், அப்படி அந்த ஸ்வஸ்வரமாக, சாஸ்த்ரீயமாக அதற்காக எப்படி படிச்சிருக்காளோ அந்த மாதிரி இருந்து, அதற்கான அலங்காரம், அதற்கான ஆஹாரம், அதற்கான ஆசாரம். ஆஹாரம், ஆசாரம், அலங்காரம் அப்படி நடக்கும்பொழுது அதன்மூலம் வரக்கூடிய சேவார்த்திகள் அனைவருக்கும் புண்யம் கிடைக்கிறது, புருஷார்த்தம் கிடைக்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு எல்லாம் கிடைக்கிறது. ஆகவே நம்முடைய மக்கள் தேசத்தை முன்னேற்ற வேண்டிய பணியோடு சேர்ந்து தேசத்தில் இருக்கக்கூடிய மக்கள் மனதளவிலே முன்னேறுவதற்கு, மனத்தளவிலேயும் முன்னேறுவதற்கு மனதளவிலே முன்னேறுவதா நினைச்சுண்டா போரும்னு இல்லை. மனத்தளவிலேயும் அதாவது மனமும் வளர்வதற்கு மனது ஸ்திரமானதாக, மனது சஞ்சலமற்றதாக, மனது நல்ல விஷயங்களில் உறுதியுடன் இருப்பதற்காக, பரந்த மனப்பான்மைகள் வளர்வதற்காக இப்படி அந்த மனதை உருவாக்குவது மந்திரங்கள். அந்த மனதை ஶுத்தப்படுத்துவது மந்த்ரங்கள். அப்படிப்பட்ட மந்திரங்களையும், மந்த்ரங்களையும் நாம் நல்ல முறையிலே பராமரித்து, பாதுகாத்து, சரியானபடி அதை சேர்க்க வேண்டிய இடத்திலே அடுத்த தலைமுறைக்காரா கிட்டே சேர்த்து தமிழகத்திற்கு மற்றும் பாரதத்திற்கு பெருமை என்பது ஆன்மீகத்தினால், தர்மத்தினால், கலாசாரத்தினால். ஆகவே சுதந்திரம் பெற்று எழுவத்தைந்து ஆண்டுகள் நிறைவு செய்து கொண்டிருக்கக்கூடிய இர்த காலகட்டத்திலே நம்முடைய நல்ல உணர்வுகளுக்கு ஊற்றாக, பிறப்பிடமாக, வழிகாட்டியாக நம்மை ஒருங்கிணைக்கும் அமைப்பாக இருக்கக்கூடிய இந்த கோவில்கள் நல்ல பொலிவுடன் விளங்குவதற்கு கட்டடங்களும் நன்றாக இருக்க வேண்டும், அந்த தேவதையை உபாஸிக்கக்கூடிய அர்ச்சகர்களும் சௌரியமாகவும் அவர்களும் பக்தர்களுடைய நல்ல எண்ணத்தை, பக்தர்களுக்கும், தேவதைக்கும் பாலமாக அவர்கள் இருந்து பக்தர்களுடைய கோரிக்கையை அங்கு சேர்ப்பிக்க வேண்டிய தேவதையிடம் சேர்ப்பித்து, அதற்காகதான் நாம் அக்னி தேவதையை உபாஸனை செய்து, தேவதைகளுக்கு நம்முடைய கோரிக்கைகளை காணிக்கையோடு சேர்த்து அனுப்புகிறோம். அவிஸ்ஸுடன் காணிக்கையோடு சேர்த்து நாம் அந்த கோரிக்கைகளை அனுப்பி வைக்கிறோம். அக்னிம் தூதம் வ்ருணீமஹே ஹோதாரம் விஶ்வவேதஸ அஸ்ய யஜ்ஞஸ்ய ஸுக்ரதும் என்பதாக அப்படிப்பட்ட (அக்னி நோதாஹா நோவத்ஸ்வரே) அந்த உபாஸனை என்பது மனிதர்களுக்குள்ளே தகவல் பரிமாற்றத்திற்க்காக இருப்பது தொழில்நுட்பம், பேச்சு வார்த்தைகள். அங்கிருக்கக்கூடிய தேவர்களுக்கு நம்முடைய கோரிக்கைகளை, நம்முடைய பக்தியை செலுத்துவதற்கு நமக்கு ஏற்படுத்தப்பட்ட வழிமுறை கோவில்கள். ஆகவே அந்த தேவதைகளை நாம் நல்ல முறையிலே பக்தியுடன் வழிபடுவதற்கு
தேவான் பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:।
பரஸ்பரம் பாவயந்த: ஶ்ரேய: பரமவாப்ஸ்யத்
இருவருக்கும் இருக்கவேண்டிய நல்லுறவை வளர்க்கக்கூடிய அமைப்பு இது. ஆகவே அந்த அர்ச்சகர்கள், நைவேத்யங்கள், அலங்காரங்கள், உத்ஸவங்கள், வாத்யங்கள், ஸன்னதித் தெரு, மாடவீதி, ராஜவீதி இவைகள் எல்லாம் கூட நல்ல நிலையை அடைந்து வரமுடியும். நம்ப கோவில் திருப்பணி என்கின்றபோது நம்ப அதை கவனிக்கணும். இது போன்ற கோவில்களிலே விசேஷமா பக்தியோட நம்முடைய அவர்கள் முக்யமா இருந்து கைங்கர்யம் எல்லாம் நிறைய பண்ணி இருக்கார். இது போன்று விசேஷமா ப்ரசித்தி பெற்ற கோவில்களிலே நடைபெற்று வருகின்றன. இப்படி அனைத்து கோவில்களிலேயும் அனைத்து அம்சங்களையும் நாம் சரியாக ளகவனிக்கும்பொழுது அனைத்து வம்சங்களும் சிறப்பாக வளரும். ஆகவே அந்த அம்சங்களை நாம் முழுமையாக கவனித்து இதை வெறும் கட்டடமாக நினைக்காமல் இது ஒரு பாலமாக, ஒரு பலமாக நமக்கு கோவில்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து நம்முடைய கோவில்களிலே திருக்குளங்கள், ஸ்தல வ்ருக்ஷங்கள் இப்படி அனைத்தையும் பாதுகாத்த, இன்னிக்கு வசதி இருக்கிறது, வாய்ப்புக்களும் இருக்கின்றன அந்த வசதிகளையும் வாய்ப்புக்களையும் சரியாக நாம் உபயோகப்படுத்தி, இதை (அலங்கார ஏற்பாட்டை)கொஞ்ச நாளிலே ஸ்ருஷ்டி பண்ணி இருக்கு. இது பெரிய இடத்தில் நடக்கக்கூடிய இந்த ஏற்பாட்டை இங்கே காமாக்ஷி அம்மன் கோவில்ல விசேஷமா சொல்லி இன்னைக்கு சாயங்காலம் சுந்தரேச ஐயர் வந்து இதெல்லாம் நடக்கிறது, இங்கே வரணும் என்றெல்லாம் சொன்னார். இங்கே இது போன்று ஸ்ரீ வித்யா பரம்பரையிலே மனீஷ பூஜை என்று எதை செய்யும்பொழுது ('சாஸ்த்ர ஸம்ப்ரமண்டபாய நம: மாணிக்யஸ்ம்ருதபாயை நம: என்றெல்லாம் எதை சொல்கிறார்களோ அது போன்று அந்த கல்பனையாக சொல்லக்கூடியதை, நாமாக பாவிக்கக்கூடியதை ப்ரத்யக்ஷமாக காண்பிக்கக்கூடிய ஒரு முயற்சியிலே அந்த செயலிலே ஈடுபட்டு, மத்தவாள் எல்லாம் சேர்ந்துண்டு இப்படி இந்த மாதிரி ஒரு அமைப்பு. அந்த நரமணி கட்டறதுன்னு இங்க இருக்கு உத்ஸவம் அம்பாள் ஸன்னதிலே சென்னைலேந்து வந்து அந்த நரமணி கட்டறதுன்னு இருக்கு. கல்போத்ஸவத்துல. அது வந்து இப்போ நிறைமணிங்கறது நிறையமணியாக அதை நிறைவாகச் செய்து நல்ல முறையிலே, ஏதோ அந்த காலத்திலே ராமு சாஸ்த்ரிகள் சொல்லி இருக்கார் ரொம்ப சின்னதாக, இப்போ அது நன்ன பெரிசாவே அது தயார் ஆகி இருக்கு அந்த தீர்த்தம். இப்படி சமனம், அந்த வஸந்த காலத்திலே தாப சமனம் என்பது கோப சமனம், தாப சமனம் இதெல்லாம் மனுஷாளுக்கு இருக்கக்கூடிய ஸந்தாபங்கள் எல்லாம் சமனமாகி எல்லாருக்கும் த்ருப்தி, எல்லாருக்கும் ஆனந்தம், எல்லாருக்கும் நல்ல ஸங்கல்பங்கள் உருவாகக்கூடிய விதத்திலே அந்த கோவில்களை நாம் நல்ல முறையிலே திருப்பணி செய்து, நல்ல முறையிலே பூஜைகள் நடத்தி ஒவ்வொரு கோவிலையும் நன்றாக திருப்பதி போன்று (hindi) அது போன்று ஒவ்வொரு ஊரிலேயும் தர்மப்ரசாரகர்கள் தேவை. தேசத்தை நல்ல முறையிலே நடத்துவதற்கு பொது சேவகர்கள், ப்ரசாரகர்கள் பலரும் பணி புரிகிறார்கள். நம்முடைய தர்மத்தை காப்பதற்காக தர்மப்ரசாரகர்களை ஆங்காங்கே தயார் செய்து இந்த காமாக்ஷி அம்பாளுடைய இந்த உத்ஸவம் எத்தனையோ பெரியவாள்ளாம் இதுக்காக பல நூற்றாண்டுகளாக கும்பாபிஷேகத்தை நடத்தி நாப்பத்தி நாலாம் (1944) வருஷம் அவா பெரியவா கும்பாபிஷேகத்தை நடத்தி எழுவத்தி ஆறாம் வருஷம் (1976) கும்பாபிஷேகத்தை நடத்தி 29.05.83 மூலா நக்ஷத்ரம் த்ருதியை அன்னிக்கும் ஒரு கும்பாபிஷேகம் நடந்தது. இது வந்து 2017 ஆம் வருஷம் பிப்ரவரி தை மாசத்துல அங்கே பெரியவாளே நேரா வந்து அந்த கும்பாபிஷேகத்துல அங்கேயே நின்னுண்டு எல்லாரும் பக்தி ஶ்ரத்தையோட அதற்கு ஏற்பாடு பண்ணி அந்த கும்பாபிஷேகத்தை அவாளே நடத்தி குடுத்ததுங்கறது இன்னிக்கும் எல்லாரும் நினைச்சு சந்தோஷப்பட வேண்டிய விஷயம் அது. ஆக இந்த நம்முடைய காமாக்ஷி அம்மன் கோவிலிலே இது போன்று நிறைய நிகழ்ச்சிகள், ஸங்கீதம் தொடர்ந்து நன்றாக நடந்துண்டு இருக்கு. பல நல்ல கார்யக்ரமங்கள் எல்லாம் நடந்து நைவேத்யமும் நல்ல பஞ்சபக்ஷ பரமான்னம்னு சொல்வா சொல்லும்பொழுது. அது பஞ்சபக்ஷம் என்பதற்கு தகுந்த மாதிரி அதிலே என்ன என்னெல்லாம் சொல்லி இருக்காளோ அந்த மாதிரி ஸஹஸ்ரநாமத்துல ஹரித்ரான்னைக ரசிகா, தத்யான்னஸக்த ஹ்ருதயா, அந்த மாதிரி ஸர்வௌதன ப்ரீதசித்தா அதுக்குத் தகுந்த மாதிரி அந்த லலிதா ஸஹஸ்ரநாமத்துல சொல்ற மாதிரி விதவிதமாக அது (நைவேத்யம்). இப்படி அந்த மதுரா ஸ்வஸ்தா ஸ்வபாவ மதுரா. ஸ்வபாவ மதுரா அதாவது மத்தவாளுக்காக நாம நல்லவாளா நடந்துக்கறதுன்னு ஒண்ணு. மத்தவாளுக்காக நாம சிரிச்சா சந்தோஷப்படுவா, ஸ்தோத்ரம் ஹபண்ணினா சந்தோஷப்படுவா, அவாளை கௌரவிச்சா சந்தோஷப்படுவா அப்படின்னு நெனச்சுக்கறது ஒண்ணு. ஸ்வபாவமதுரா அவளுடைய பாவமே (bhava) மாதுர்யம்தான். வேறவிதமான எண்ணமே கிடையாது. இப்படி 'ஸ்வச்சா ஸ்வபாவமதுரா தீரா தீர ஸமர்ச்சிதா'. அதுலே அந்த ஸ்வபாவமே தன்னுடைய எண்ண ஓட்டமே திதிப்பானது. அப்படிப்பட்ட அம்பாளுக்கு அந்த அஞ்சு விதமான பக்ஷணங்களையும், சித்ரான்னங்களையும் பண்ணி அலங்கார நைவேத்யம்னு பேரு. மத்யானம் அது வந்து எழுவத்தி ஆறாம் வருஷ கும்பாபிஷேகத்துக்கு அப்பறமா
பெரியவா அதை விஸ்தாரப்படுத்தினா. அதுக்கு முன்னாடி தயிர் சாதம். மத்யான வேளையிலே அலங்கார நைவேத்யம் னு சொல்றது. அலங்காரத்திற்காக சொல்லப்பட்ட வார்த்தை அல்ல அது. அலங்காரத்துக்காக சொல்றதுனு உண்டு. ஆக வந்து நிறைய நைவேத்யங்கள் எல்லாம் விசேஷமா நடந்துண்டு இருக்கு. அதுவும் அம்பாள் ஸன்னதில அந்த காயத்ரி மண்டபத்துல விசேஷமா அந்த பாவாடை விதவிதமா அதுவும் நடக்கறது. அந்த மாதிரி நடக்கக்கூடிய கைங்கர்யங்களிலே அனைத்து கோவில்களும் நம்முடைய தமிழ் நாட்டிலேயும்சரி, பாரத தேசத்துலேயும்சரி இருக்கக்கூடிய அனைத்து கோவில்களிலேயும் நல்ல முறையிலே முழுமையாக வழிபாடுகள் எல்லாம் நடைபெற்று அந்த தேவதையினுடைய அனுக்ரஹம் பக்தர்களுக்கு கிடைத்து அதன் மூலம் 'காமாக்ஷிஹி த்ரயோவர்ணாஹா ஸர்வமங்கள ஹேதவ:' என்கிற அனைத்து மங்களங்களும் ஶ்ரேயஸ்ஸுடன் கிடைப்பதற்கு 'வஸந்தாதி லோகஹிதம் சரம்' வஸந்தாதி லோகஹிதம் - அந்த வஸந்த ருதுவானது எப்படி லோகத்திற்கு இதத்தை செய்கிறதோ அது போன்று லோகஹிதத்திற்காக இது போன்ற பணிகள் மேலும் மேலும் நடைபெற்று இந்த உத்ஸவமும் இந்த வருஷம் எல்லோராலும் நல்ல விதமா பண்ணி இருக்கு. வரக்கூடிய வருஷத்துல இன்னும் என்ன எல்லாம் உண்டோ அதெல்லாத்தையும் சேர்த்து அங்கே ஸஹஸ்ரதீபாலங்காரம்னு திருப்பதியிலே இருக்கு. பார்க்றதுக்கு ரொம்பவும் நன்றாக இருக்கு. இது மாதிரி இங்கே ஒரு மண்டபம் அமைஞ்சிருக்கு. இந்த மண்டபத்துல எல்லாரும் தரிசனம் பண்ணக்கூடிய வசதி இருக்கு. இந்த உத்ஸவமானது, அந்த ப்ரம்மோத்ஸவத்தை ராஜவீதியில லகுப்ரம்மோத்ஸவமா இருக்கக்கூடிய இந்த கன உத்ஸவத்துலேயும், இந்த வஸந்தோத்ஸவத்துலேயும் எல்லாம் நன்றாக விசேஷமாக பண்ணி அம்பாளுடைய அனுக்ரஹத்திற்கு அனைவரும் பாத்ரர்களாவதற்கு 'அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி உமையே' என்கிற அம்பாளை ப்ரார்த்திப்போமாக.
ஹர ஹர ஶங்கர! ஜய ஜய ஶங்கர!!
Transcribed by Smt. Nivedita
Anugraha Bashanam
Comments