
இக் கோவிலில் மூலவர் கிழக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூலவருக்கு நேர்எதிரில் உள்ள இக் கல்தூணில், மேற்கு நோக்கி, ஶ்ரீ ஏகாம்பரரை ஆதிசங்கரர் நின்ற நிலையில் தியானத்தில் இருத்தி வழிபடும் நிலையில், சிலை வடிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ மகாஸ்வாமிகள் என்று எல்லோராலும் போற்றி வணங்கப் படும் ஶ்ரீ ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமது ஜீவித காலத்தில், இக்கோவிலுக்கு வரும்போதெல்லாம், இந்த தூணுக்கு அடியில் தர்பாசனத்தில் அமர்ந்து ஆதிசங்கரரைப் போலவே நீண்ட நேரம் ஏகாம்பரரை த்யானித்து அமர்ந்திருப்பார்கள் என்றும் அந்த காட்சியினை தரிசிக்கும் வாய்ப்பு பலமுறை தனக்கு கிட்டியது என்றும் ஶ்ரீ சங்கராச்சார்யார் கூறினார். இந்த சிறப்புத் தகவலை விளக்கமாகக் கூறுவதற்கு காரணம் கோவிலுக்கு வரும் பக்தர்களும் இத் தூணுக்கு அடியில் அமர்ந்து குருநாதரையும் ஏகாம்பரரையும் த்யானித்து தமது ஆன்மிக ஆற்றலை வளர்த்துக் கொள்ளலாம் என்ற பொது நன்மை கருதியே ஶ்ரீ சங்கராச்சார்யார் இவ்வாறு கூறினார்கள்.
Comentarios