“இந்து தர்மம் பற்றிய ப்ரசாரங்களை இன்னும் முனைப்புடன் ஜனங்களிடையே முன்னெடுத்துச் செல்ல வேண்டும்”- பூஜ்யஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார். திருப்பதி திருமலையில், ஆண்டு தோறும் ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளுக்கு கோவில் சிறப்பு மரியாதைகள் செய்யப்படுவது வழக்கம். ஶ்ரீஸ்வாமிகளை, கோவில் வாசலில், 8-12-24 ஞாயிறு காலை,திருமலையில் திருப்பதி தேவஸ்தானம் தலைவர்கள் மற்றும் உயர் அதிகரிகள், மேள தாளங்களுடன் பரிவட்டம் , சடாரி மாலை முதலியவை உட்பட்ட கோவில் மரியாதைகளுடன் வரவேற்றனர். ஶ்ரீஸ்வாமிகளுக்கென, சிறப்பு ஆராதனைகளுடன் ஶ்ரீவெங்கடேச பெருமாள் தரிஸனம் செய்து வைக்கப்பட்டது. தரிஸனம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஶ்ரீஸ்வாமிகள், “தேச ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கூடிய நமது பாரம்பரிய கலாசாரத்தின் மேம்பட்ட குணங்களை எடுத்துரைக்கும் வகையில் ஜனங்களிடையே முனைப்பான தர்மப்ரசாரம் செய்யப்பட வேண்டும் என்றார்.
Source Courtesy: Indian Express,Dinamalar,Dinakaran.Andra Jothi Newspapers
Comments