top of page

Sri Periyava - Vijaya Yatra - Dharmasthala






கர்நாடக மாநிலத்தில் இம் மாதம் மூன்றாம் தேதி முதல் விஜய யாத்திரை மேற்கொண்டு வரும், நமது பூஜ்யஶ்ரீ பெரியவாள், தமது யாத்திரையின் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம்(09 Nov) மாலை, புகழ்மிக்க தர்மஸ்தலாவை அடைந்தார்கள். ஶ்ரீ ஸ்வாமிகளுக்கு ஊர் எல்லை நுழைவு வாயில் அருகில் மேள தாளத்துடன் மிகச் சிறப்பான வரவேற்பளித்தார், தர்மஸ்தலாவின் தர்மாதிகாரியும் ராஜ்ய சபா உறுப்பினருமாகிய ஶ்ரீ வீரேந்திர ஹெக்டே அவர்கள். மேலும் நகர் நுழைவு வாயிலிருந்து முகாம் இருப்பிடம் வரையில் அற்புதமானதொரு சோபான ஊர்வலமும் ஏற்பாடு செய்திருந்தார். இவ் ஊர்வலத்தின் சிறப்பு என்னவெனில் ஶ்ரீ ஸ்வாமிகள் அமர்ந்து ஊர்வலம் வர தன்வசம் உள்ள vintage காரினை(Dodge Kingsway & Number :MYB - 3) அலங்கரித்து பயன் படுத்தினார். 1954 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த மைசூர் அரண்மனையில் அப்போதைய ராஜாவின் பயன்பாட்டில் இருந்ததாகும். Vintage Cars எனப்படும் பழைய மற்றும் ஆடம்பர மாடல் கார்களை சேகரிக்கும் ஆர்வலரான ஶ்ரீ ஹெக்டே தமது மிகப் பழைமையான ஆனால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிற அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஆதிசங்கரர் பரம்பராகத மூலாம்நாய ஶ்ரீ காமகோடி பீடாதிபத்தின் 70 ஆவது மீடாதிபதியான ஶ்ரீ ஸ்வாமிகளின் ஶோபன ஊர்வலத்திற்கு பயன் படுத்தியது மிகப் பொருத்தமே. பழம் பெருமைகள் பலகொண்ட மிகப்பழைமையான ஶ்ரீமடம் சம்ஸ்தானத்தின் பீடாதிபதிகளை, கர்நாடக மாநில விஜய யாத்திரையின்போது, ஊர்வல வாகனம் உட்பட அனைத்திலும் பழம் பெருமைகளோடு கெளரவித்த ஶ்ரீ வீரேந்திர ஹெக்டே அவர்களுக்கு தஞ்சாவூர் பரம்பரா இணையதளம் நன்றிகளை தெரிவிக்கிறது. ஶ்ரீ பெரியவாளின் அனுக்ரஹ பாஷணத்தை இன்றைய சென்னை பதிப்பு தினமலர் வெளியிட்டுள்தை இங்கே பிரசுரிப்தில் பெருமை கொள்கிறகிறோம்.






121 views0 comments

Comments


bottom of page