top of page
Writer's pictureAruL Amudham

THE GLORY OF THANJAVUR DISTRICT

எழுதியவர் யாரோ ?

அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாகாரர்.

நான் ரசித்தஅனுபவித்த மறக்க முடியாத

எங்கள் தஞ்சாவூர் ஜில்லா


வடக்கே சிதம்பரம் கிழக்கே நாகப்பட்டிணம்

வேதாரண்யம் வங்கக்கடல் மேற்கே பெரம்பலூர்

தெற்கே திருச்சி என அகண்ட பரந்து விரிந்த ஜில்லா


பண்பாடு, பாரம்பரியம், கொடை, கருணை, தானம்

தருமம், அகந்தை,ஆதிக்கம், செவரணை என

குணங்கள் கொண்ட எங்கள் தஞ்சை

எல்லா மாதமும் திருவிழாதான்


காவேரியில் தண்ணீர் வந்தால் வீட்டுக்கு மஹாலக்ஷ்மி வந்த மாதிரி ஒரு வரவேற்பு இருக்கும்


ஆற்றில் ஊர்ந்துவரும் பொன்னியை தூப தீபம் காட்டி

விழுந்து சேவிப்பார்கள்

××


சோழன் தேசம்


உலகம் போற்றும் ஸ்ரீ ப்ரகதீஸ்வரர் திருக்கோவில்


தமிழில் புலவனாக வேண்டுமா?

இருக்கிறது தஞ்சை கருந்தட்டான்குடி தமிழ்ச் சங்கம்


பாத்திரங்கள் நகைகள் வாங்க வேண்டுமா

இருக்கிறது கும்பகோணம்


மளிகை மண்டிக்கு இருக்கிறது மாயவரம்


காய்கறிகள் வெத்தலை வாழை இலைகள்

பழங்கள் வாங்க இருக்கிறது திருவையாறு


பட்டு சேலை பட்டைக்கரை வேஷ்டிக்கு திருபுவனம்




ஆழித் தேருக்கு திருவாரூர்


திருநாவுக்கரசர் பதிகம் பாடி கதவைத் திறந்த

திருமருகல் ஈசன் திருக்கோவில்


நந்தனாருக்காக நந்தி விலகி

வழிவிட்ட திருப்பூன்கூர் திருக்கோவில்


ஈசன் களிப்புடன் தாண்டவமாடிய

ஆனந்த தாண்டவபுரம்


திருமணம் ஆகாத மனக்குறை நீங்க

பரிகாரம் காண திருமணஞ்சேரி


தரித்த கரு சிதறாமல் காத்தருளும்

கர்ப ரக்ஷாம்பிகை திருக்கோவில்


நவகிரக ஸ்தலங்கள்

×××


கோடை காலத்தில் திண்ணையில்

வெள்ளி கூஜாவில் தண்ணீர்

கும்பகோணம் வெத்தலை

வறுத்த சீவல் பெரப்பம்பாய் விரித்து

அதில் அமர்ந்து சற்றே ஊர் வம்பு

×××


கோவிலில் நடக்கும் பாட்டுக் கச்சேரி


ஸ்வாமி புறப்பாடு நாலு வீதிகளிலும்

விடிய விடிய நாதஸ்வர கச்சேரி


களைகட்டும் மல்லாரி புறப்பாடு

எட்டு சிறப்புத் தவில்

×××


சங்கீதமும் வாழ்வில் ஒரு சுவைதான்


ஊருக்குள் யாராவது வந்து விலாசம் கேட்டால்

அவர்களை அந்த வீட்டிற்கே அழைத்துச் செல்லும்

சிறுவர்கள்


குழந்த நல்லா இருக்கீங்களா என்று பாசத்துடன்

சிறுசை விசாரிக்கும் கிராமத்து பெரிசுகள்


நாலு இட்லிக்கு ஒரு தூக்கு நிறைய சாம்பார் தரும் பிராமணாள் காப்பி கிளப்கள்


மொந்தன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம்

பேயன் பழம் பூவன் பழம் இப்படி பருவ காலத்திற்கு ஏற்ப பலவித பழங்கள் விளையும் பூமி


பேர் சொல்லும் தஞ்சாவூர் கதம்பம்


ஒட்டு மாங்கா கௌதாரி நீலம்

ருமானி மாங்காய் வகைகள்

மாயவரம் ஸ்பெஷல் பாதிரி மாம்பழம்


பலாப்பழம் கொய்யா பம்ப்ளிமாஸ்

கிடாரங்காய்

×××


வீட்டுக்கு வீடு புளிய மரம்


சில்க் ஜிப்பா பட்டைக்கரை திருபுவனம் வேஷ்டி

கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரம்

காதில் வைரக் கடுக்கண் வாய்க்கு கொழுந்து வெத்தலை பன்னீர் புகையிலை வறுத்த சீவல்

கக்கத்தில் எவர்சில்வர் வெத்தலைப்பொட்டி


எப்பவும் சவாரிக்கு தயாராக நிற்கும்

அழகிய மாட்டு வண்டி

கொம்பு சீவிய காங்கேயம் காளைகள்


கொம்பில் ஒரு குப்பி அதில் தொங்கும் குஞ்சலம்

பட்டைத் தோலில் சரமாகத் தொங்கும்

ஜல் ஜல் சலங்கை


தார் ரோடில் வரிசையாக ஓடும் வண்டிகள்


புழுதிபறக்க செல்லும்

பண்ணையாரின் அம்பாசிடர் கார்


பஸ் ட்ரைவருக்கு அண்ணே

பின்னால ப்ளஷர் வழிவிடுங்க என்று சொல்லும் கண்டக்டர்


கொல்லைப்புறம் மாட்டுக் கொட்டா

அதன்பின் பத்தடி நடந்தால் ஒரு வாய்க்கால்


ஒரு பொட்டுக்கூடை நிறைய பித்தளை பாத்திரங்கள்

காப்பி பித்தளை டபாரா பாத்திரங்களை எடுத்துச் சென்று சுத்தம் செய்து எடுத்து வரும் பாட்டி

×××


ஊருக்குள் குறைந்தது ஐந்து கோயில்கள்

ஐந்து குளங்கள் இருக்கும்


கிராமத்தை சுற்றி இருபுறமும்

சுற்றி ஓடும் ஆறுகள்


ஊருக்கு வெளியே ஒரு டென்டுக் கொட்டா சினிமா


ஊருக்கு மறைவிடத்தில் ஒரு கள்ளுக் கடை


பசுமை வளமை இன்னும் எத்தனையோ


என்ன ஓய்...


நாம் தஞ்சை மாவட்டக்காரன் என்று பெருமை அடைவோம்.🙏


44 views0 comments

Recent Posts

See All

Commentaires


bottom of page