23/07/2024
திருவானைக்கா சங்கர மடம் முகாம்
திருச்சி நகரம்
மூன்று ஆச்சாரியர்கள் , சங்கராச்சாரியார்கள் - மஹா பெரியவா, புதுப் பெரியவா, பால பெரியவா - என்று அழைக்கப் பட்டார்கள்.
பால பெரியவா என்று அழைத்ததில் ஒரு பொருள் இருந்தது. பீடத்திற்கு வந்த இளம் வயது. இளைஞர் என்று அனைவரும் பாலப்பெரியவா என்று அழைத்ததின் காரணம் புரிந்து கொள்ள முடிந்தது.
மஹா பெரியவா அவர்கள் பெரியவர்,மூர்த்தி கீர்த்தி அனைத்திலும் பெரியவர். உயர்ந்தவர். அதனால் மஹா பெரியவா என்று அழைக்கப் பட்டார்.
ஆனால் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை
எதற்கு "புதுப் பெரியவா" என்று அழைத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை. புது என்ற வார்த்தை எதற்கு வந்தது என்று இன்று மாலை ஆறு மணி வரை புரியாத புதிராக இருந்தது.
மாலை புதுப் பெரியவா அவர்களின் 90வது ஜெயந்தி சமயம் அருளுரை செய்த போது, இந்த்க் கேள்விக்கு பதில் கிடைத்தது.
ஆச்சாரியாள் அவர்கள் கூறினார்கள் - "தர்மத்தை புதுப்பொலிவுடன் பிரச்சாரம் செய்தார் என்பதால். புதுப் பெரியவா என்று அழைக்கப் பட்டார்" என்று, உண்மை தான், எப்பொழுதெல்லாம் தர்மம் சீர்குலைந்து போகுமோ, அப்பொழுதெல்லாம் நமது அனுபவம் - அவதார புருஷர்கள் தோன்றி தர்மத்தை நிலை நிறுத்துகிறார்கள், ஒவ்வொரு மகான்களும் , அக்கால மக்கள் புரிந்து கொள்ளும் படி,தர்மத்தை புதுப் பிறந்தார்கள்.
அவர்களின் பிறப்பின் ரகசியம் நமக்குத் தெரிவதில்லை. அவர்களின் அருமை, பெருமை, சேவை, நாட்டிற்க்கு செய்த தொண்டு, தர்மத்திற்கு ஆற்றிய பணி, அவர்களின் காலத்திற்கு பின்பே நாம் அறிகிறோம்.
Comments